ஜெயலலிதா உயிரைப் பறித்த Septic Shock ! ஈசியா காப்பாற்ற மருந்து கண்டுபிடித்த தமிழர்

post-img

சென்னை: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மாறுதல் செய்திருந்தால் அன்றைக்கு அவரைக் காப்பாற்றி இருக்க முடியும் என்று டாக்டர் ஒருவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அவர் மரணத்திற்கான காரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. திமுக கூட 2021 தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்களை தண்டிப்போம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆறுமுக ஆணையம் அளித்த அறிக்கையைப் பற்றி இதுவரை ஆளும் கட்சி எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவே இல்லை.

சட்டமன்றத்தில் அது பற்றிய விவாதம் இதுவரை நடைபெறவும் இல்லை. ஆனால், அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில விசயங்கள் கசிந்து மிகப் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஆணையம் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்தது. அப்படி எந்த விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை.
தீவிர சிகிச்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு Septic Shock ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அன்று இருந்த மருத்துவச் சிகிச்சை முறைப்படி அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த 8 ஆண்டுகளில் மருத்துவ உலகம் முன்னேறிவிட்டது. இன்று உள்ள புதிய கண்டுபிடிப்பின் படி Septic Shock வந்த பிறகு ஒருவரை எப்படிக் காப்பாற்றலாம் என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் வசந்த குமார் நடேசன் கண்டுபிடித்துள்ளார். இவர் மருத்துவர் மட்டுமல்ல; கூடவே மருந்து ஆராய்ச்சியாளர்.
டாக்டர் வசந்த குமார் நடேசன் அளித்துள்ள பேட்டியில், "நான் Septic Shock சம்பந்தமான மருத்துவ பாதிப்பு குறித்து அதிகம் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். இந்த Septic Shock என்றால் என்ன என்பது பலருக்குப் புரியாது. ஒருவரை ஒரு நோய் தாக்கி அவர் ஐசியுவில் அனுமதிக்கப்படுகிறார் என்றால், பலவிதமான மருந்துகளைக் கொடுத்து அவரைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். அந்த மருந்துகள் பலனளிக்காத போது இறுதியில் அவர் உயிரிழப்பார். அப்போது நோயாளிக்கு ஒரு Septic Shock ஏற்படும். இதுதான் இறுதிக்கட்டம். அதன்பின் அவரைக் காப்பாற்ற முடியாது. உதாரணமாகச் சொன்னால் ஜெயலலிதா Septic Shock ஏற்பட்ட பிறகுதான் உயிரிழந்தார்.

இந்த Septic Shock பற்றித்தான் நான் அதிகம் ஆராய்ச்சி செய்துள்ளேன். இந்த நிலையை ஒரு நோயாளி அடைந்துவிட்டால் அவரைக் காப்பாற்றுவது சாதாரண விசயம் கிடையாது. உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிலை இதுதான். இதில் ஏதேனும் மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆராய்ச்சிக்குள் நான் வந்தேன். உதாரணமாகச் சொன்னால், ஒருவருக்கு பிபி அளவு குறைவாக இருந்தால் அவருக்கு அதை உயர்த்த வேண்டிய மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்த முறைதான் உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால், இந்த மாதிரியான சிகிச்சையில் ரிசல்ட் என்ன என்று பார்த்தால், இரண்டு நோயாளிகளில் ஒருவர் இறக்கக்கூடும். அதான் யதார்த்த நிலையாக இருக்கிறது.
அதேபோல் Septic Shock நிலை ஏன் ஏற்படுகிறது. அந்த நிலை உருவாகும் போது உடலில் என்ன நடக்கிறது? என்பதைப் பற்றி என் ஆராய்ச்சியின் மூலம் ஒரு புதிய உண்மையைக் கண்டுபிடித்தேன். மயக்கநிலையில் ஆக்சிஜன் மூலமாக ஏற்படும் மாற்றங்கள் என்ன என்று ஆராய்ச்சி செய்து சொன்னேன். அதற்குப் பெயர் warburg effect. இதை உலக அளவில் முதன்முறையாகக் கண்டு சொன்னது நான் தான். அதன்பின் ஒருவர் சொன்னார்.

இந்த warburg effect என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 100 ஆண்டுகள் Otto Warburg என்ற மேதை இருந்தார். அவர் அனைத்து வகையான புற்றுநோய்க்கான மூல காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னார். அவர் புற்றுநோய்க்கு மட்டுமான காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார். நான் அனைத்து வகையாக நோய்களுக்கும் இந்த warburg effect காரணம் என்பதைக் கண்டறிந்து சொல்லி இருக்கிறேன். கடந்த 2017-ல் என் ஆராய்ச்சியை பெரிய அளவில் யாரும் கவனிக்கவில்லை. இன்று மருத்துவ உலகம் இந்த warburg effect என்ற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
முன்னாள் முதல்வர் Septic Shock ஏற்பட்டு இறந்தபோது இந்தளவுக்கு warburg effect பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதாவது ஐசியுவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையிலிருந்த போது பிபி அளவு திடீரென்று குறைந்தது. அதை அதிகப்படுத்த மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டன. இந்த முறைதான் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சிகிச்சை முறையில் தவறுகள் ஏதுமே இல்லை. இப்போது எனது ஆராய்ச்சி வந்த பிறகு என்ன கண்டுபிடித்துள்ளோம் என்றால், ஜெயலலிதாவுக்கு பிபியை அதிகப்படுத்தக் கொடுத்த மருந்துகளுக்கு அப்படியே நேரெதிரான மருந்துகளைத்தான் கொடுத்திருக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதைப்போன்று ஒருமுறை அன்று கண்டறியப்படவில்லை. ஒருவேளை இந்த முறை சிகிச்சையை அன்று ஜெயலலிதாவுக்குச் செய்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும்.

Related Post