குருப்பெயர்ச்சி 2025: புத்தாண்டு 2025 பிறக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. வரும் புத்தாண்டில் குருவும் சந்திரனும் மிதுனத்தில் ஒன்றாக இணைவதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்படும். அந்த வகையில், கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (Guru Peyarchi 2025)
கிரகங்களின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல்வேறு விதமான தாக்கங்களையும், ஏற்றங்களையும் ஏற்படுத்தும். 2024 ஆம் ஆண்டு நிறைவடைகிறது. புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. சனி பகவான், குரு பகவானின் சேர்க்கையால் அற்புத யோகங்கள் அமையப் போகின்றன. அந்த வகையில், 2025 குருப்பெயர்ச்சியும், அதனால் உருவாகும் கஜகேசரி யோகமும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி அந்த ராசியில் 12 மாதங்கள் நீடிப்பார். குரு பகவான் 2025ம் ஆண்டு மே 14 ஆம் தேதி, ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்தப் பெயர்ச்சியால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுனத்தில் குரு பகவான் சந்திரன் சேர்க்கை நடைபெறும்.
சந்திரனும் குருபகவானும் ஏதாவது ஒரு ராசியில் சேர்க்கையாகும்போது கஜகேசரி யோகம் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதேபோல, குரு பகவானும் சந்திரனும் கேந்திர வீட்டில் அதாவது நான்காவது, ஏழாவது, பத்தாம் வீட்டில் இருக்கும் போதும் கஜகேசரி யோகம் உருவாகும். கஜகேசரி யோகத்தால் 2025 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தில் திளைக்கப் போகும் ராசிகள் குறித்து காணலாம்..
மிதுனம்: புத்தாண்டு 2025 இல் மே 28 ஆம் தேதி குரு பகவானும், சந்திர பகவானும் மிதுன ராசியில் சேர்க்கையாகின்றனர். இதனால், மிதுன ராசிக்காரர்களுக்கு தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களுடைய அறிவுத் திறனால் அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுதலையாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் பேச்சுத்திறன், நடத்தையால் கஷ்டமான காரியங்களையும் எளிமையாக செய்து முடித்து அதில் வெற்றி காண்பீர்கள்.
கன்னி: கஜகேசரி யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகப் போகின்றன. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். வெளியூர் பயணம் மற்றும் வெளியூரில் வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளியூர் தொடர்பான அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். உங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி காண்பீர்கள்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகத்தால் பல்வேறு நற்பலன்கள் உண்டாகும். நேர்மறையான சிந்தனைகள் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்னைகள் அனைத்தும் பனிபோல விலகும். புதிய வீடு, மனை வாங்கும் யோகங்கள் உண்டாகும். அதுதொடர்பான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஆன்மிக பயணத்தால் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். பணவரவு உண்டாகும். கடன்கலைக் குறைப்பீர்கள்.
தனுசு: மிதுன ராசியில் இணையும் குரு பகவான், சந்திரனால் கஜகேசரி யோகம் உருவாகும். தனுசு ராசியின் ஏழாவது வீட்டில் குரு பகவானும், சந்திர பகவானும் இணைவதால் குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். பணவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணத்துக்காக காத்திருந்தவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். நிதி ஆதாயம் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை பெருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
கும்பம்: கஜகேசரி யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். நல்ல சுப பலன்களை உண்டாக்கி மகிழ்ச்சியைப் பெருக்கும். ஏழரைச் சனி உங்களை விட்டு விலகுவதால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணவரவை அள்ளிக் கொடுக்கும். வேலை, தொழில், வியாபாரம், கல்வி என அனைத்து துறையிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குலதெய்வ வழிபாட்டால் நற்பலன்களைப் பெறுவீர்கள். ஆன்மிக காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அதனால், நல்ல முன்னேற்றதையும் காண்பீர்கள்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.