சனிப்பெயர்ச்சி 2025: தொழிலில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி.. பணத்தில் புரளப்போகும் 5 ராசிகள்

post-img
சனிப்பெயர்ச்சி: 2025 புத்தாண்டில் மீன ராசியை நோக்கி பயணிக்கவுள்ளார் சனி பகவான். தற்போது சனிப்பெயர்ச்சி நடப்பதற்கு முன்பு கடைசியாக பூரட்டாதி நட்சத்திரத்துக்குள் நுழையவுள்ளார். அந்த வகையில், பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சனி பகவானால் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நற்பலன்களை அள்ளித் தரப்போகிறார். எந்தெந்த ராசிக்காரர்கள் பலனை அனுபவிக்கப் போகின்றனர் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (lucky zodiac signs in 2025) தற்போது கும்பத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் 2025 புத்தாண்டில் மீன ராசியை நோக்கி பயணிக்கவுள்ளார். கணக்கை முடிக்கும் கடவுள் சனி பகவான். கால புருஷ சக்கரம் மேஷத்தில் ஆரம்பித்து மீனத்தில் முடியும். மீனத்தில் சனி பிரவேசிக்கும்போது அதனுடைய மொத்த சுற்று நிறைவடைகிறது. பாரபட்சமே இல்லாமல் தண்டனை மற்றும் நல்ல பலன்களை வழங்கும் நீதிபதிதான் சனி பகவான். நீங்கள் செய்யும் நல்லது, கெட்டது என அனைத்து கர்மங்களுக்கும் ஏற்ற அனைத்துப் பலன்களையும் அள்ளித் தருவார் சனி பகவான். சனி பகவான் துலாம் ராசியில் உச்சமடைகிறார். அதாவது, நிறையாக இருந்தாலும், குறையாக இருந்தாலும் மொத்தமாக கணக்கைத் தீர்ப்பவர் சனி பகவான். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். 2025 புத்தாண்டு சனிப்பெயர்ச்சி நடப்பதற்கு முன்பு நடைபெறும் கடைசி நட்சத்திர பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியால் 5 ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல பல அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. டிசம்பர் 27 ஆம் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் நுழைகிறார். அடுத்த மூன்று மாதங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ள சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே ஐந்து ராசியைச் சேர்ந்தவர்களுக்கு தொழிலில் வெற்றியையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் கொடுக்கவுள்ளார். மேஷம் (Sanipeyarchi for mesham): பூராட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சனி பகவானால் மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு நிதிநிலை மேம்படும். ஆடம்பரமான பொருள்களை வாங்கி மகிழும் யோகம் உண்டாகும். புதிய வாகனம், வண்டிகளை வாங்குவீர்கள். புதிய வீடு, மனை, சொகுசான வாகனங்கள் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டு. தாயுடன் இதுவரை இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. விளையாட்டு, கல்வி போன்றவற்றில் ஈடுபடும் மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். எந்தவொரு வேலையில் ஈடுபட்டாலும் அதில் சிறந்த பலனைக் காண்பீர்கள். கடகம் (Sanipeyarchi for kadagam): கடக ராசிக்காரர்களுக்கு சனியின் இடப்பெயர்ச்சியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். உங்களுடைய செயல்கள் புகழை ஏற்படுத்தி தரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். காதலிப்பவர்களுக்கு துணையின் புரிதலும், ஆறுதலும் கிடைக்கும். முதலீடு தொடர்பான விஷயங்களில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். தொழில், வியாபாரம், வேலை என அனைத்திலும் வருமானம் பெருகும். துலாம் (Sanipeyarchi for thulam): பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழையும் சனியால் அனைத்து விஷயங்களிலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து வேலைகளையும் சரியாக செய்து முடிப்பீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்கள், உறவினர்களுடன் இணக்கமான, அன்பான சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக திரும்பி வராத பணங்கள் உங்களை வந்து சேரும். கடன்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகளின் செயல் உங்களுடைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். உங்களுடைய தொழில், வியாபாரத்துக்கு அரசு சார்பில் சலுகைகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தனுசு (Sanipeyarchi for dhanusu): சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பல நற்பலன்களை கொடுக்கப் போகிறது. வாழ்க்கையில் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த அனைத்து குழப்பங்களும், பிரச்னைகளும் தீரும். குடும்பத்தில் மகிழ்க்கு பெருகும். வருமானம், செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எந்தவொரு செயலைச் செய்தாலும் அதில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் யோசித்து முடிவெடுப்பது நல்லது. முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. குடும்பத்தில் உள்ள பொறுப்புகளை உங்களுடைய துணையுடன் சேர்ந்து நிறைவேற்றுவது நல்ல பலன்களைத் தரும். தொழில், வியாபாரம், வேலையில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். ஏதேனும் ஒரு வகையில் பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் விஷயத்தில் மகிழ்ச்சி நிறைந்த காலமாக இருக்கும். கும்பம் (Sanipeyarchi for kumbam): கும்ப ராசிக்காரர்களின் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு முடிவு கட்டுவீர்கள். குடும்பத்திலும், வேலை செய்யும் இடங்களிலும் உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு திருமண யோகம் கைகூடி வரும். தொழில் செய்பவர்கள் சிறப்பான ஒப்பந்தங்களைப் போட்டு அதில் லாபம் காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இணக்கமான சூழல் உருவாகும். வருமானம் பெருகும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post