சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அக்கட்சி சார்பில் இன்று அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தேமுதிக திட்டமிட்டது. இந்த பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமாக இருந்த மறைந்த விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க தேமுதிக முடிவு செய்தது. இதில் பங்கேற்க முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , தவெக தலைவர் விஜய் என அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேமுதிக சார்பாக நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதேபோல விஜயகாந்த நினைவு தினமான இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிகவின் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.