சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. முதல் தகவல் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும்.
எஃப்ஐஆரில் மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. எஃப்ஐஆர் வெளியாவது புகாரளித்தவரின் சுதந்திரத்தை பறிக்கும். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.
அவரிடம் எந்த தேர்வு கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. புாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்து படிப்பை முடிக்க நடவடிக்கை வேண்டும். மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை டிஜிபி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.