திருச்சி: "6 தடவை அல்ல, 6 ஆயிரம் தடவை சாட்டையில் அடித்து கொண்டாலும், நீங்கள் செய்த பாவங்கள் நீங்காது, என் கேள்விகளும் நிக்காது" என்று தமிழக பாஜக தலைவரின் சாட்டையடி குறித்து, திருச்சி சூர்யா விமர்சித்துள்ளார். அத்துடன், அண்ணாமலையிடம் 9,10வது என்று கேள்விகளை கேட்டிருக்கிறார்.
பாஜகவின் முன்னாள் மாநில நிர்வாகி திருச்சி சூர்யா தன்னுடைய எக்ஸ் தளத்தில், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எல்லாரையும் கேள்வி கேட்கும் நீங்கள், நான் கேட்கும் 6 கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? என கடந்த 24ம்தேதி பதிவிட்டிருந்தார். தொடர்ச்சியாக 25ம்தேதி 7, 8 என 2 கேள்வி கேட்டு பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது 9, 10 வதாக கேள்வி கேட்டு மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம்!!. ஆறு தடவை அல்ல.... ஆயிரம் தடவை நீங்கள் சாட்டையில் அடித்து கொண்டாலும், நீங்கள் செய்த பாவங்கள் நீங்காது, என் கேள்விகளும் நிக்காது...
100 கோடி: கேள்வி எண் 9.... கடந்த மூன்று வருடத்தில் உங்க மனைவி அகிலாவின் பிஸினஸ் பல நூறு கோடியாக வளர்ந்தது எப்படி?, மனைவி பங்குதாரராக இருக்கும் பல நிறுவனங்களில் ஒன்றான Burrow Properties Private Limited, இதன் துணை நிறுவனம்தான் Lands and Lands Ventures Private Limited.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் Lands மற்றும் Lands Ventures Private Limited நிறுவனம் கோவையில் சுமார் 23 இடங்களில் குறைந்தபட்சம் ரூ. 2000 கோடி மதிப்புள்ள திட்டங்ளை செயல்படுத்தி வருகிறது. லேட்டஸ்டாக, 2024 தேர்தலுக்கு பிறகு பழமுதிர் தோட்டம் என்ற பெயரில் நூறு கோடி மதிப்பில் பார்ம் ஹவுஸ் திட்டம் போட்டுள்ளனர். இந்த நிறுவனங்கள் மூலம் 2023ல் சூலூர் செலக்கரச்சல் கிராமத்தில் பல கோடி மதிப்புள்ள சைட் பூமியை உங்கள் மனைவி வாங்கியுள்ளார்.
நெருங்கிய உறவு: Burrow Properties நிறுவனத்தில் உங்கள் மனைவி பங்குதாரர் என்பது உங்கள் அரவக்குறிச்சி தேர்தல் அபிடவிட்டிலேயே இருக்கிறது, அதனால் தாங்கள் இதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மனைவியை ஆச்சும் நெருங்கிய உறவு என்று ஏற்றுக் கொள்வீர்களா?. கேள்வி எண் 10... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க, உங்களோட பித்தலாட்டத்துக்கு ரபேல் வாட்ச் பில்லே சாட்சி.
கையில் எழுதுன பில்லு, ரொக்க பணமாக ரூ.3.0 லட்சம் கொடுத்து பழைய வாட்ச்ச வாங்குன பிராடு நீங்க தாண்ணே!, ரபேல் வாட்ச் என்னோட தேசபற்றின் அடையாளம், நான் சாகும் வரை அணிவேன் என புருடா விட்டியேண்ணே, இப்ப அந்த வாட்ச் எங்கண்ணே? சொன்ன வார்த்தையை என்றுமே காப்பாற்ற முடியாத ஆளுதானே நீ. அந்த வாட்ச் வாங்கி கொடுத்தவர் பெயர் சேரலாதன், அவருடைய Crimson Dawn வீட்டில்தான் 2019 முதல் சில வருடம் குடியிருந்தீர்கள்.
ஒத்துக்குவீங்களா: நல்ல அறிமுகம் உள்ள நபரிடம் இருந்து எதற்காக ரொக்க பணம் கொடுத்து, ரசீது போட்டு பழைய வாட்ச் வாங்கினீர்கள்? உங்களுக்கு வீடு கொடுத்து, வாட்ச் கொடுத்த பிறகு மும்பை நிறுவனம் உள்பட மூன்று புதிய நிறுவனங்கள் தொடங்கி உள்ளார் சேரலாதன். சமீபத்தில் அவர் தொடர்புடைய இடங்களிலும் ஐடி ரெய்டு நடந்துள்ளது. இந்த ரெய்டுகாய்ச்சும் உங்களுக்கும் இந்த ரெய்டுக்கும் சம்பந்தம் இருக்குதுன்னு ஒத்துக்குவீங்களா?" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.