கன்னியாகுமரியின் கடல் நடுவே கண்ணாடி பாலம்: முதல்வர் திறந்து வைக்கிறார்! திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா

post-img
கன்னியாகுமரி: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும், தமிழக அரசின் சார்பில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படுகின்றன.. இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பிலான கண்ணாடி இழை பாலத்தை பொதுமக்களுக்காக திறந்து வைக்கிறார். கன்னியாகுமரிக்கு முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக திகழும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்க்க படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கண்ணாடி பாறை: இதனால், பாறைக்கு செல்வோர் அனைவருமே திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வரும் வகையில் ரூ.37 கோடி செலவில் கடல்சார் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், இதை சிறப்பிக்கும் விதமாக இன்றும், நாளையும் தமிழக அரசின் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளி விழா: வெள்ளி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இன்று மாலை தொடங்குகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார். பின்னர் அவர், மாலை 4.30 மணிக்கு பூம்புகார் படகு குழாமுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை பார்வையிடுகிறார். அதன்பிறகு படகு மூலமாக சென்று திருவள்ளுவர்,சிலையை பார்வையிட்டு பாதமலருக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.,,பின்னர், திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும், பூம்புகார் நிறுவனத்தையும், கைவினைப் பொருட்கள் அங்காடியையும் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். வெள்ளி விழாவில், திருக்குறள் நெறிபரப்பும் 25 தகைமையாளர்களுக்குப் பரிசுகளை முதல்வர் வழங்குகிறார். இன்று மாலை 7 மணிக்கு, சுகி.சிவம் தலைமையில் "திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே - சமுதாயத்துக்கே" எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது. நாளை டிசம்பர் 31-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், அய்யன் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலரை வெளியிட்டு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி விழாப்பேருரை நிகழ்த்துகிறார். இசை நிகழ்ச்சி: பியானோ இசைக் கலைஞர் செல்வன் லிடியன் நாதஸ்வரத்தின் திருக்குறள் இசை நிகழ்ச்சியும் நாளை நடக்க உள்ளது.. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கமும், மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை பல்வேறு கலைஞர்கள் பங்குபெறும் அரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, திருக்குறள் ஓவியக் கண்காட்சியைத் திறந்துவைத்து நினைவுப் பரிசுகள் வழங்குகிறார். விருந்தினர் மாளிகை: கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தீவிரமாக நடக்கின்றன.. 10,000 பேருக்கு மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டு நிறைவையொட்டி, வெள்ளி விழாப் பணிகளுக்காக ரூ.10.89 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நாளை டிசம்பர் 31 ஆம் தேதியே நடைபெறும். நேரடி ஒளிபரப்பு: அதேபோல, முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், அம்பத்தூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post