வரலாற்றில் முதல்முறை.. நிதியமைச்சரை சந்தித்த கார்ப்பரேட் நிறுவனங்கள்! தனி நபர் வருமான வரி குறைகிறது?

post-img
சென்னை: தனி நபர் வருமான வரியை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். முதல்முறையாக இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அமைச்சரை பல நிதி விவகாரங்கள், பட்ஜெட் அறிவுப்புகளுக்காக சந்திக்கும். இந்த ஆண்டும் பட்ஜெட் தாக்கல் தயாரிப்பதற்கு முன்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமனை கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தித்தன. ஆனால் இந்த முறை தனி நபர் வருமான வரியை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. நாங்கள் தரும் வருமானம் வரி காரணமாக குறைந்துவிடுகிறது. வீட்டிற்கு எடுத்து செல்லும் சம்பவம் அதிகரிக்க வேண்டும். இதற்காக வருமான வரியை குறைப்பது சரியாக இருக்கும் என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். பட்ஜெட் மாற்றம்: 2024 பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், 2025ம் ஆண்டு பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது உள்ள நடைமுறை: தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும். முதல் முறை - பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய முறை: பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு முன்பு வரை, நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். அதுவே 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். நடைமுறையில் இருந்த இந்த புதிய வரி விதிப்பு முறையில் கடந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் . 300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் . 600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும் 900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும் 1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும் 15 மேல் வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் . புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது. ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post