இப்படியே போனால்.. மனைவி விட்டுட்டு ஓடிடுவாங்க! புலம்பி பேசிய கவுதம் அதானி.. என்ன இப்படி சொல்லிட்டாரே

post-img
சென்னை: இந்தியாவில் சமீப காலமாக ஊழியர்களின் வேலை நேரம் மற்றும் work-life balance குறித்த விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விவாதங்களில் தற்போது கவுதம் அதானியும் கலந்து கொண்டு உள்ளார். ஆனால் இவர் ஊழியர்களுக்கு, மக்களுக்கு ஆதரவாக பேசி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவுதம் அதானி.. மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லாம் மரணமே இல்லாதவர்கள் அல்ல. எல்லோருக்கும் மரணம் உள்ளது. வேலை மட்டும் நமது வாழ்க்கை அல்ல. வேலையை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. வேலைக்கு வெளியே குடும்பம் உள்ளது. இதை புரிந்து கொண்டால் நமது வாழ்க்கை எளிமையானதாக மாறிவிடும். உங்கள் வேலை-வாழ்க்கை நேரம்.. நீங்கள் வேலை பார்க்கும் விதம், நேரம் என் மீது திணிக்கப்படக்கூடாது, என் வேலை-வாழ்க்கை நேரம்.. உங்கள் மீது திணிக்கப்படக்கூடாது. யாரோ ஒருவர் குடும்பத்துடன் நான்கு மணிநேரம் செலவழித்து அதில் மகிழ்ச்சியைக் காண்கிறார் என்றால் அது அவரின் விருப்பம். வேறு யாராவது ஒருவர் எட்டு மணிநேரம் செலவழித்து அதை அனுபவித்தால், அதுதான் அவர்களின் விருப்பம். இவர் செய்வதுதான் சரி.. அவர் செய்வதுதான் சரி என்று சொல்ல முடியாது. ஆனால் ஒன்று சொல்கிறேன்.. ஒருவர் எட்டு மணி நேரம் செலவழித்தால், அவரின் மனைவி விட்டுட்டு ஓடிவிடுவார்.. அதனால் உங்கள் வேலை நேரத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.. என்று கவுதம் அதானி தெரிவித்து உள்ளார். இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்வது குறித்து சமீபத்தில் பேசிய நிலையில் கவுதம் அதானி இப்படி பேசி உள்ளார். நாராயண மூர்த்தி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நாம் கடினமாக உழைத்து இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைக்க வேண்டும்.. இதற்காக விடாமல் உழைக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். நாம் மிக சரியான காலத்தில் உள்ளோம். இது போன்ற சாதகமான சூழ்நிலை அமைவது கடினம். இந்த இளைஞர்கள் பலத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்ஃபோசிஸ் உருவாக்கிய போது அதை உலக தரத்திற்கு கொண்டு செல்வோம். உலகின் சிறந்த நிறுவனங்களுடன் போட்டி போட வைப்போம் என்று கூறினேன். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை சிறந்த உலகளாவிய நிறுவனங்களுடன் ஒப்பிடும் அளவிற்கு மாற்றுவேன் என்று சொன்னேன். அதற்காக உழைத்தேன். சிறந்த உலகளாவிய நிறுவனங்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நான் சும்மா இல்லை.. அதற்காக உழைத்தேன்.. 800 மில்லியன் இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவதோடு இருக்க கூடாது. கடினமாக உழைக்க வேண்டும். 10 மணி நேரத்திற்கும் மேல் இருக்க கூடாது. இந்தியாவில் 800 மில்லியன் இந்தியர்கள் வறுமையில் உள்ளனர். நாம் கடினமாக உழைக்கும் நிலையில் நாம் முன்னேற முடியும். நாம் கடினமாக உழைத்து இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைக்க வேண்டும், என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு நாம் 40 டூ 48 மணி நேரம் வேலை பார்க்கிறோம். அது சரியாக இருக்காது. நாம் வேலை நேரத்தை 70 மணி நேரமாக உயர்த்த வேண்டும். தந்தை அந்த நேரத்தில் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருந்த அசாதாரண முன்னேற்றத்தைப் பற்றி பேசுவார், 70 களின் முற்பகுதியில் பாரிஸில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது, நான் குழப்பமடைந்தேன். இந்தியா எவ்வளவு அசுத்தமானது, ஊழல் நிறைந்தது என்று மேற்குலகம் பேசிக்கொண்டிருந்தது. என் நாட்டில் வறுமை இருந்தது, சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது ஆனால் நான் கடுமையாக உழைத்தேன். இன்போசிஸ் நிறுவனத்தை மேலே கொண்டு வர வேண்டும் என்பதற்காக மிக கடுமையான பணிகளை செய்தேன். நாம் இப்போதும் அதே சூழலில்தான் இருக்கிறோம். மேற்கு உலக நாடுகளை விட புதிய உயரத்திற்கு நம்மை கொண்டு செல்ல வேண்டும். வாரத்திற்கு நாம் 40 டூ 48 மணி நேரம் வேலை பார்க்கிறோம். இனி வேலை நேரத்தை உயர்த்த வேண்டும். நம்முடைய இந்திய கலாச்சாரம் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதை மறக்க கூடாது. இந்த கலாச்சாரம் மீண்டும் சர்வதேச அளவில் உச்சம் அடைய வேண்டும், என்று கூறியது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post