சனி ஓகே.. ராகு – கேதுவை கவனிங்க.. 2025 புத்தாண்டு மீனம் ராசிக்கு எப்படி இருக்கு?

post-img
புத்தாண்டு 2025: 2024 ஆம் ஆண்டின் கடைசி நாளில் இருக்கிறோம். விடிந்தால் 2025 புத்தாண்டு பிறக்க போகிறது. இது 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கும். இந்நிலையில் மீன ராசிக்கான புத்தாண்டு பலனை இந்த தொகுப்பில் காணலாம்.. (Puthandu rasi palan for meenam) மீன ராசிக்காரர்கள் மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும், அதை வெளிப்படுத்தாமல் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு பயணிப்பீர்கள். 2024 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அதிகம் அலைந்திருப்பீர்கள். ஏழரை சனியில் விரய சனியும் இருப்பதால் தொட்டது அனைத்திலும் வீண் விரயம் கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும். திட்டமிட்ட எந்த காரியமும் திட்டமிட்டபடி நடந்திருக்காது. உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனால் குடும்ப வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. போதாக்குறைக்கு ராசியில் ராகு அமர்ந்து படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். மே மாதம் 18 ஆம் தேதியுடன் ராகு உங்கள் ராசியை விட்டு விலகப் போகிறார். அதனால் மே 18 ஆம் தேதிக்கு பிறகு உங்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். (New year rasi palan for meenam) வீண் சந்தேகம், முன் கோபம், கவலைகள் குறையும். சவால்களை எதிர் நீச்சல் போட்டு சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசிக்கு 12 வது இடத்தில் அமர்ந்துள்ள ஏழரை சனி மார்ச் 29 ஆம் தேதி முதல் நேரடியாக உங்கள் ராசியில் வந்து அமரப் போகிறார். ஜென்ம சனியாக வருவதால் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்க வாங்கலில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். மார்ச் 29 ஆம் தேதிக்கு பிறகு உடல்நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நேரத்துக்கு சாப்பிடுவது, நேரத்துக்கு தூங்குவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இரவு நேரப் பயணத்தை முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது. மே 18 ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சி நடக்கவுள்ளது. அது உங்கள் ராசிக்கு நல்ல சாதகமாக இருக்கும். உங்கள் ராசிநாதனான குரு பகவான் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதனால் புதிய முயற்சிகளில் தடங்கல் ஏற்பட்டு வருகிறது. மே 14 ஆம் தேதிக்கு பிறகு குரு பகவான் ராசியில் இருந்து நான்காம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். சிறிய சிறிய தடைகள் இருந்தாலும், எல்லாவற்றிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். புனரமைத்தல், விரிவுபடுத்துதல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பணியாட்களை மாற்றுதல், நவீனமாக்குதல் போன்ற நடவடிக்கை சாதகமாகும். உத்யோகத்தில் ஆங்காங்கே பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கிறது. பிரச்னைகள் இருந்தாலும் உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களின் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் - மனைவி இடையே அவ்வப்போது சங்கடங்கள் ஏற்படும். அதனால் அனுசரித்து செல்வது நல்லது. 2025 புத்தாண்டிலும் தடைகள் உங்களை சூழ்ந்தாலும் அதை தகர்த்தெறிந்து வெற்றி நடைபோடுவீர்கள். காரியங்களில் வெற்றி பெறுவதற்கு ஶ்ரீ வராகி அம்மனை தரிசப்பது நல்லது. பச்சை அரிசி தானம் செய்வது தடைகளை நீக்கும். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது கூடுதல் பலன்களை ஏற்படுத்தும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post