ஆனந்த் அம்பானி கையில்.. அது என்ன! அம்மாடி விலை மட்டும் ரூ.22 கோடி.. உலகிலேயே மொத்தம் 3 தான் இருக்காம்

post-img
மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி.. வாட்ச் பிரியரான இவரது கலெக்ஷனில் பல விலையுயர்ந்த வாட்ச்கள் உள்ளன. இதற்கிடையே சமீபத்தில் இவர் அணிந்து வந்த RM 52-04 "ஸ்கல்" ப்ளூ சஃபைர் வாட்ச் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரூ. 22 கோடி மதிப்புள்ள இந்த வாட்ச் குறித்து நாம் பார்க்கலாம். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு கடந்தாண்டு தான் திருமணம் நடந்தது. உலகமே வியக்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாகத் திருமணம் நடந்தது. அதில் உலகின் டாப் பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். கடந்தாண்டு இந்தியாவில் கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வாகவும் இது இருந்தது. அப்போதே ஆனந்த் அம்பானி தனது திருமணத்திற்கு வந்திருந்த ஷாருக்கான் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வாட்ச்களை பரிசாக வழங்கியிருந்தார். அதேபோல பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி கூட அப்போது அவர் அணிந்திருந்த ரிச்சர்ட் மில்லே நிறுவனத்தின் வாட்ச்சை பார்த்து வியந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த மற்றொரு வாட்ச் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாட்ச் பிரியரான ரிச்சர்ட் மில்லே, படேக் பிலிப், ஆடெமர்ஸ் பிகுவெட் எனப் பல ஆடம்பர நிறுவனங்களின் வாட்ச்களை தனது கலெக்ஷனில் வைத்துள்ளார். சமீபத்தில் அவர் தனது மனைவி ராதிகா மெர்ச்சண்டுடன் வெளியே சென்றிருந்த போது, அவர் அணிந்திருந்த வாட்ச் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் அப்போது ரிச்சர்ட் மில்லே RM 52-04 "ஸ்கல்" ப்ளூ சஃபைர் என்ற வாட்சை அணிந்திருந்தார். இது உலகின் மிக அரிதான கடிகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த வாட்ச் அனைவருக்கும் கிடைக்காதாம். தனது நிறுவனத்தின் நீண்ட கால மற்றும் மிகச் சிறந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இதை ரிச்சர்ட் மில்லே நிறுவனம் விற்கும். மேலும், இதுவரை மொத்தமாகவே இந்த மாடலில் மூன்று வாட்ச்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதால் இது ரொம்ப அரிதான வாட்ச்சாக பார்க்கப்படுகிறது. இந்த வாட்ச்சை நேரில் பார்க்கும் நபரே கூட அதிர்ஷ்டசாலிகள் தான் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். ஆனந்த் அம்பானி அணிந்திருந்த ரிச்சர்ட் மில்லே RM 52-04 வாட்ச் ஒரு sapphire என்ற கல்லில் வடிவமைக்கப்பட்டது. கடற்கொள்ளையர் கொடியில் உள்ள எலும்புகள் போலத் தோற்றமளிக்கும் இதன் மையப் பகுதி பார்க்கவே அழகாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். இந்த வாட்ச்சின் மதிப்பு சுமார் 2,625,000 டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 22 கோடியாகும். ஆனந்த் அம்பானி இந்த வாட்ச்சுடன் இருக்கும் போட்டோக்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ரிச்சர்ட் மில்லே என்பது சுவிஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற வாட்ச்மேக்கிங் நிறுவனமாகும். இது உலகின் பல அதிக விலை மற்றும் பிரத்தியேக டிசைன்களை கொண்ட வாட்ச்களை வடிவமைக்கும். உலகெங்கும் உள்ள தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் விரும்பி அணியும் வாட்ச் பிரண்டாக இது இருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post