உள்ளதும் போச்சு..லைஃப தொலச்சிட்டோமப்பா! டிடிவியால் புலம்பித் தவிக்கும் அமமுகன்ஸ்! எடப்பாடிக்கு தூது?

post-img
சென்னை: தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர், அதிமுகவின் அடுத்த பொது செயலாளர் என எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை அவர் கூறிய அரசியல் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் தூது விட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக ஒரு காலத்தில் இருந்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரான இவர் அதிமுகவின் பொருளாளராக இருந்தார். தேனி தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் டெல்லி அரசியலை கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிய ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற்றினார். அதற்கு பிறகு அவர் மறையும் வரை அதிமுக பக்கமே டிடிவி தினகரன் தலை வைத்து படுக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தலை எடுத்தபின் டிடிவி தினகரன் மீண்டும் முக்கியத்துவம் பெற்றார். இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்கு டிடிவி தினகரன் குறித்து அவ்வளவாக தெரியாது. ஆனால் அதிமுக சீனியர்களுக்கு டிடிவி தினகரன் என்றாலே ஒருவித பயம் தான். குறிப்பாக சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்த போது அடுத்த தலைமுறை அரசியல்வாதியாக பார்க்கப்பட்டவர் டிடிவி தினகரன். சசிகலா சிறைக்கு சென்ற நிலையில் அதிமுகவை வழிநடத்தும் பொறுப்பு டிடிவி தினகரன் கொடுக்கப்பட்டது. அப்போது அவருடன் அதன்படி ஆர்கே நகர் இடைத்தேர்தலிலும் நிறுத்தப்பட்டார். ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று இடைத் தேர்தலில் சுயேசையாகவே போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு தமிழக அரசியலில் முக்கிய நபராக டிடிவி தினகரன் பார்க்கப்பட்டார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல டிடிவி தினகரனின் ஆதிக்கம் குறைந்தது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருடன் தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, தங்கத் தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் கைகோர்த்தனர். பிறகு தற்காலிக ஏற்பாடாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என புதிய கட்சியை ஆரம்பித்தார். அதற்கு சசிகலா ஆதரவும் தெரிவிக்கவில்லை. எதிர்க்கவும் இல்லை. தற்போது வரை தமிழகத்தின் பத்தோடு பதினொன்று என்ற எண்ணிக்கையிலேயே அமமுக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க தனித்துப் போட்டி, பாஜகவுடன் போட்டி என பலமுறை முயன்றும் ஒரு தேர்தலில் கூட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற முடியவில்லை. கடைசியாக நடந்த மக்களவைத் தேர்தலில் தேனியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இடையிடையே எடப்பாடி பழனிச்சாமி இடமிருந்து அதிமுகவின் மீட்போம் என டிடிவி தினகரன் கூறி வந்தாலும் அவரது வாதம் பெரிய அளவில் எடுபடவில்லை. ஒரு காலத்தில் அதிமுகவின் அதிகார மையமாக வளம் வந்த தினகரன் தற்போது அதிமுகவில் ஒரு தொண்டனை கூட வழித்து போட முடியவில்லை. மேலும் அவருடன் இருந்த தங்கத் தமிழ்ச் செல்வன், செந்தில் பாலாஜி திமுக கூடாரத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஏற்கனவே அவர் தரப்பில் இருந்த பல மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். இந்த நிலையில் பல தலைமை கழக நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி இடம் சரணடைந்து விடுவோம், இப்படியே போனால் நமது அரசியல் வாழ்க்கை சுத்தமான ஆகிவிடும் என புலம்பி வருகிறார்களாம். புத்தாண்டு - பொங்கல் பரிசாக டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வெளியேறுகிறார்கள் என்று அறிவிப்பு வரும் என்கின்றனர் அதிமுகவினர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post