வந்துட்டேன்னு சொல்லு.. பிறந்தது 2025! முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடும் சமோவா, நியூசி! முழு லிஸ்ட்!

post-img
சென்னை: உலக அளவில் பல்வேறு மாற்றங்களை தந்து விட்டு 2024 புறப்பட்டு விட்டது. 2025 தற்போது பிறந்து இருக்கிறது. இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில் கிழக்கு பசிபிக் நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்திய நேரப்படி 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. இதை அடுத்து அந்த நாடுகளில் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள், சோகங்கள், அரசியல் மாற்றங்கள், சினிமா நிகழ்வுகள், அரசியல் வருகை, பிரபலங்களின் மரணங்கள் என இந்த ஆண்டு உள்ளூர் தொடங்கி உலக அளவில் பல மாற்றங்கள் அரங்கேறி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நிகழ்வுகளும் துக்கமான நிகழ்வுகளும் சிறு சிறு தொல்லை தரும் சம்பவங்களும் நடைபெறுவது வழக்கம்தான். அவற்றையெல்லாம் ஒருங்கே தன்னுடன் புதைத்துக் கொண்டு 2024 விடைபெறும் நிலையில் இந்திய நேரப்படி இன்று 12 மணிக்கு 2024 புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு 2024: கடந்த ஆண்டு நடந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் அடுத்த ஆண்டும் தொடர வேண்டும், மனதிற்கு தொல்லை கொடுத்த நிகழ்வுகள் வரும் ஆண்டில் இல்லாமல் இருக்க வேண்டும் என புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்தோடு காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் நாடாக டோங்கா சமோவாவும், அடுத்ததாக கிரிபாட்டியும், அடுத்ததாக நியூஸிலாந்தும் புத்தாண்டை வரவேற்றுள்ளன. புத்தாண்டு பிறந்தது: பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிப்பாட்டியில் 04.29.05 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. அதற்கு அடுத்ததாக மாலை 4:30 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்திருக்கிறது. இதை எடுத்து வான வேடிக்கை முழங்க ஒருவருக்கொருவர் கட்டியணைத்து புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி வரவேற்று இருக்கின்றனர். மக்கள் அதன் மூலம் 2024 நிறைவடைந்து 2025 புத்தாண்டில் உலக நாடுகள் அடி எடுத்து வைத்திருக்கின்றன. களைகட்டிய கொண்டாட்டங்கள்: புத்தாண்டு தினத்தை ஒட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நமக்கு 4.30 மணி என்றாலும் அங்கு நள்ளிரவு என்பதால் 11.59 மணிக்கு ஆரம்பித்த கவுண்டவுன் முடிந்து 12 மணி எட்டியதும் வான வேடிக்கை விண்ணை பிளந்தது. பூமியிலிருந்து விண்ணை நோக்கி சென்ற பட்டாசுகள் வெடித்துச் சிதறி உற்சாகம் தரும் புத்தாண்டை வரவேற்றன. வானில் இருந்து பூத்தூவுவது போல வர்ணஜாலம் காட்டிய வான வேடிக்கைகளை கண்டு 'ஹேப்பி நியூ இயர்' என மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்றுனர். மற்ற நாடுகளில் எப்போது?: இந்தியாவில் 12 மணிக்கு தான் புத்தாண்டு என்றாலும் நமக்கு முன்பாகவும் பிறகும் பல நாடுகள் புத்தாண்டை வரவேற்க இருக்கிறது. அதன்படி முதலில் சமூக புத்தாண்டை சமோவா, கிரிப்பாட்டி, நியூசிலாந்து கொண்டாடியது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அதாவது 5.30 மணிக்கு ரஷ்யாவின் ஒரு சில பகுதிகளிலும், 6:30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, கான்பெரா, ஹோனியாரா பகுதிகளில் புத்தாண்டு பிறக்கிறது. 7 மணிக்கு, அடிலைய்டு, புரோக்கன் ஹில், செடுனாவிலும், 7:30 மணிக்கு பிரிஸ்பேன், போர்ட் மோர்ஸ்பை, ஹகத்னா ஆகிய பகுதிகள் புத்தாண்டை கொண்டாடுகின்றன. இந்தியாவில் 12 மணிக்கு: 8:30 மணிக்கு ஜப்பான், தென் கொரியாவின் டோக்யோ, சியோல், பியாங்யாங்க், டிலி, நெருல்மட்டிலும், 9:30 மணிக்கு சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளும், 10:30 மணிக்கு இந்தோனேசியா, தாய்லாந்து 11 மணிக்கு மியான்மர்,11:30 மணிக்கு வங்கதேசம் ஆகிய நாடுகள் கொண்டாடுகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா தனது புத்தாண்டை கொண்டாட காத்துள்ளது. இலங்கை,12:30 மணிக்கும், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் 1 மணிக்கும் புத்தாண்டை வரவேற்கின்றன. கடைசியாக புத்தாண்டு கொண்டாடும் நாடு: அதன்பிறகு, அஸெர்பைஜன், ஈரான், மாஸ்கோ, கிரீஸ், ஜெர்மனி, பிரேசில், நியூஃபவுன்லேண்ட் ஆகிய நாடுகள் கொண்டாடுகின்றன. நாளை அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு இங்கிலாந்தும், காலை 9 மணிக்கு கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் புத்தாண்டை கொண்டாடுகின்றன. இறுதியில் ஜனவரி 1 மாலை 5:50 மணிக்கு பேக்கர் தீவு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post