சென்னை மக்களே கவனம்.. நள்ளிரவில் பூனையை கடத்தும் கும்பல்! ஏன் தெரியுமா? பின்னணியில் அதிர்ச்சி

post-img
சென்னை: சென்னையில் நள்ளிரவில் வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகளை குறிவைத்து ஒரு கும்பல் கடத்தி வருகிறது. இதுதொடர்பான வீடியோ பரவி உள்ள நிலையில் அதன் பின்னணியில் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. நம் வீடுகளில் நாய், பூனைகளை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறோம். இந்த செல்லப்பிராணிகள் மீது கொண்ட பாசத்தால் பலரும் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். அதோடு தாங்கள் செல்லும் இடங்களுக்கும் பூனை, நாய்களை வாகனத்தில் வைத்து அழைத்து சென்று வருகின்றனர். இப்படியாக குடும்பத்தில் ஒருவர் போல் செல்லப்பிராணிகளை நாம் வளர்த்து வருகிறோம். இந்நிலையில் தான் சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் பூனையை ஒரு கும்பல் குறிவைத்து பிடித்து செல்வதும், அதன் பின்னணி குறித்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகர் 1வது குறுக்கு தெருவில் பரிதா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக பூனைகளை வளர்த்து வருகிறார். அந்த பூனைக்கு பூஜ்ஜியம்மா என்று பெயர் சூட்டி உள்ளார். இவரது வீட்டில் வளர்த்த பூனை மற்றும் பக்கத்து வீட்டில் வளர்த்த 2 பூனைகள் என்று ஒரே நாளில் மொத்தம் 3 பூனைகள் திடீரென்று மாயமாகின. பூனைகள் எங்காவது சென்றிருக்கலாம். இரவில் வீட்டுக்கு வந்துவிடும் என்று அவர்கள் நம்பி இருந்தனர். ஆனால் பூனைகள் வீட்டு வரவில்லை. சந்தேகமடைந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் வந்த ஒரு கும்பல் பூனைகளை வலைப்போட்டு பிடித்து செல்வது தெரியவந்தது. இதுபற்றி பரிதா பானு விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தான் வளர்த்த பூனையை ஒரு கும்பல் நள்ளிரவில் பிடித்து சென்றதாகவும், பூனைகளால் இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுவதால் ஒரு கும்பல் அதனை கடத்தி சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கண்காணிப்பு கேமராவின் பதிவில் இருக்கும் கும்பலை போலீசார்தேடிவருகின்றனர். இதுபற்றி பரிதா பானுவின் குடும்பத்தினர் கூறுகையில், ‛‛எங்களின் வீட்டின் பூனையை செல்லமாக வளர்த்து வந்தோம். அந்த பூனைக்கு ஊட்டி விட்டால் தான் அது உணவு சாப்பிடும். ஆனால் இப்போது அசால்டாக வந்து பூனையை பிடித்து செல்கின்றனர். அவர்களிடம் கேட்டால் பூனையால் இடையூறு ஏற்படுவதாக வந்த புகாரால் தான் பிடித்து செல்வதாக கூறுகின்றனர். எங்களின் தொடர்பு எண்கள் அபார்ட்மென்ட் உரிமையாளர்களிடம் உள்ளது. பூனை தொந்தரவு செய்வதாக எங்களிடம் புகார் வந்தால் அதனை பிடித்து வேறு இடத்தில் விடுவோம். ஒருநாளைக்கு 10 பூனைகள் என்று டார்க்கெட் செய்து அதிகாலையில் வந்து பூனைகளை பிடித்து செல்வார்களாம். ஒரு பூனையை பிடித்து செல்ல ரூ.300 முதல் ரூ.400 வரை வாங்குகின்றார்களாம்'' என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post