16 முறை உதித்த சூரியன்.. சுனிதா வில்லியம்ஸ் பார்த்த புத்தாண்டு விடியல் இதுதான்!

post-img
நியூயார்க்: உலம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் இன்று 16 புத்தாண்டு சூரிய உதயத்தை பார்த்திருக்கிறார். உலகில் முதிலில் சூரிய உதயம் தெரியும் பகுதியாக கிழக்கு நியூசிலாந்து இருக்கிறது. இங்குள்ள கிரிட்டிமாட்டி எனும் தீவில் சூரிய உதயம் முதலில் தெரியும். அதன் பின்னர்தான் மற்ற பகுதிகளுக்கு தெரியும். அந்த வகையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இந்த தீவில் உள்ள மக்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரிய நாடுகள், சீனா, இந்தியா என புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதே நேரம் சர்வதேச விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் சுமார் 16 முறை புத்தாண்டு சூரிய உதயத்தை பார்த்திருக்கிறார். அதாவது சர்வதேச விண்வெளி மையத்திலிருக்கும் அனைவராலும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சுமார் 16 முறை சூரிய உதயத்தை பார்க்க முடியும். இதற்கு காரணம் சர்வதேச விண்வெளி மையம் சுற்றும் வேகம்தான். இது மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் சுற்றினால் 90 நமிடங்களில் பூமியை ஒரு ரவுண்டு அடித்துவிடலாம். அதனால்தான் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் எவராலும் 16 முறை சூரிய உதயத்தை பார்த்துவிட முடியும். அப்படித்தான் சுனிதா வில்லியம்ஸும் பார்த்திருக்கிறார். அறிவியலாளர்களை பொறுத்தவரை புத்தாண்டு என்பது கற்பனைதான். அதாவது, பூமி புள்ளி A என்கிற இடத்தில் தொடங்கி, சூரியனை ஒரு சுற்று சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர்வதைத்தான் புத்தாண்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால் விஞ்ஞானிகளை பொறுத்த வரை பூமி எப்போதுமே A என்கிற புள்ளியை மீண்டும் வந்தடையாது என்று கூறுகின்றனர். இதற்கான காரணம், சூரியன் நகர்வதுதான். மணிக்கு சுமார் 8.28 லட்சம் கி.மீ வேகத்தில் இந்த பால்வெளி அண்டத்தை சுற்றி வருகிறது. அது நகரும்போது அத்துடன் சேர்ந்து நம்மையும் இழுத்தக்கொண்டு நகர்கிறது. அப்படி இருக்கும்போது பூமி எப்படி மீண்டும் A என்கிற புள்ளிக்கு வரும்? இந்த அண்டத்தில் வழி சொல்ல நட்சத்திரங்களைதான் பயன்படுத்துவார்கள். சூரியனை அல்ல என்பது கவனிக்கத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post