இந்தியாவுக்கு பயம் காட்டும் சீனாவின் 'வெள்ளை யானை'! பதிலடிக்கு தயாராகும் விமானப்படை

post-img
பெய்ஜிங்: சீனா உருவாக்கியுள்ள 'வெள்ளை யானை' எனப்படும் 6ம் தலைமுறை போர் விமானம், அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 6,258 கி.மீ தொலைவில் உள்ள இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்கு வெறும் 1 மணி நேரத்தில் வந்துவிடும். இந்த பகுதியில் எல்லை பிரச்னை இருக்கும் நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப்படை அதிநவீன விமானத்தை உருவாக்கி வருகிறது. 6ம் தலைமுறை போர் விமானம்: உலகம் முழுவதும் போர் விமானங்கள் இருக்கிறது. இதில் மிகவும் மேம்பட்டவைதான் 6ம் தலைமுறை போர் விமானங்கள். வெறும் 3 நாடுகள்தான் இந்த விமானங்களை வைத்திருக்கின்றன. இதில் முதல் இடத்தில் அமெரிக்காவின் F-16 விமானமும், இரண்டாவது இடத்தில் ரஷ்யாவின் MiG-31 விமானமும் இருக்கிறது. மூன்றாவது நாடாக சீனா இந்த விமானத்தை வைத்திருக்கிறது. இதன் பெயர் Chengdu J-36. மணிக்கு 3,000 கி.மீ வேகத்தில் பாயும் இது தனது பாதையில் உள்ள அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிடும். சீன விமானத்தின் சிறப்பம்சங்கள்: வெள்ளை யானை என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த விமானத்தை இதுவரை சீனா பொது வெளியில் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், இந்த விமானத்தை சோதனை செய்து பார்த்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும்போது இது ரேடார் கண்களிலிருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், பல ஆபத்தான வெடி பொருட்களை தாங்கி சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அருணாச்சலப் பிரசதேசம்: இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளான அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை சீனா தனது நாட்டின் பகுதி என உரிமை கோரி வருகிறது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. எல்லை பகிர்வு விஷயத்தில் இந்தியா பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியிருக்கிறது. சூழல் இப்படி இருக்கையில் எதற்காக 6ம் தலைமுறை விமானத்தை சீனா உருவாக்க வேண்டும் என்று கேள்வி எழுந்திருக்கிறது. ஒருவேளை இந்தியாவுடனான பஞ்சாயத்தை, வன்முறை மொழியில் பேசி தீர்த்துக்கொள்ள சீனா விரும்புகிறதோ? என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் சந்தேகித்துள்ளனர். இந்திய விமானப்படை: சீனாவின் ராணுவ வளர்ச்சிக்கு சவால் விடும் வகையில், தனது 5ம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் இந்திய விமானப்படை தீவிரமாக இறங்கியுள்ளது. நம்மிடம் இருக்கும் ரஃபேல் போர் விமானம் 4.5ம் தலைமுறையை சேர்ந்தது. எனவே 5ம் தலைமுறை விமானத்தை உருவாக்க தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு 5ம் தலைமுறை விமானத்திற்கான முன்மாதிரி உருவாக்கப்படும் என்றும், 2030ம் ஆண்டில் இந்த விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாமதம்: சீனாவின் ராணுவத்துடன் ஒப்பிடும்போது, இந்தியா கொஞ்சம் பின்தங்கிதான் இருக்கிறது. ஆனாலும், சீனாவிட பல மடங்கு வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதாவது தற்போது சீனா உருவாக்கியுள்ள 6ம் தலைமுறை போர் விமானம் எந்த அளவுக்கு நம்பகமானது என்பது தெரியாது. ஏனெனில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா தனது விமானங்களை பொது வெளியில் அறிமுகப்படுத்திவிட்டது. ஆனால் சீனா இன்னும் அதை செய்யவில்லை. இதற்கான அர்த்தம், சீனா தனது தயாரிப்பில் இன்னும் முழுமையடையவில்லை என்பதுதான். சீனா முழுமையை எட்டுவதற்குள், இந்தியா பதிலடி கொடுக்க ரெடியாகிவிடும். வெள்ளை யானையா? அல்லது புலியா? என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் தெரிந்துவிடும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post