சொல்லி அடித்த ஆவடி.. டாப் 10க்குள் வந்து.. புதிய சாதனை.. ஒரே இரவில் எல்லாமே மாறிடுச்சே

post-img
சென்னை: ஆவடி மாநகராட்சி ஒரே இரவில் தமிழ்நாட்டின் டாப் 10 மாநகராட்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது. இப்போது அதிக மக்கள் தொகை கொண்ட.. அதாவது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் ஆவடி 8ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 10 லட்சம் மக்கள் தொகையை எட்டும் எட்டு மாநகராட்சியாக ஆவடி மாறி உள்ளது. இன்றைய நிலவரப்படி, TN 25 நகர மாநகராட்சிகளைக் கொண்டுள்ளது (21+ 4 புதிய மாநகராட்சி). 1. சென்னை 2. கோயம்புத்தூர் 3. மதுரை 4. திருச்சி 5. சேலம் 6. தாம்பரம் 7. திருப்பூர் 8. ஆவடி மொத்தமாக 12 புதிய கிராமங்கள்.. பகுதிகள் இந்த முறை ஆவடியில் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆவடியில் அளவு கூடி உள்ளது. அதே சமயம் சென்னையும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி அதன் அதிகார வரம்பில் வானகரம் மற்றும் அடையாப்பம்பட்டு ஆகிய இரண்டு கிராம பஞ்சாயத்துக்களை சேர்த்துள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த இந்த முடிவு நேற்று எடுக்கப்பட்டது. இங்கே ஏற்பட்டுள்ள ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் ஐடி நிறுவனங்களின் வருகை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவிதமாகவும் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே. மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது. மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள் / பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின் / பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவணங்கள். தொழிற்சாலைகள் பங்கும் இவற்றில் அமைந்துள்ளன. இப்பெருநிறுவனங்கள். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும். திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது. இதன் மூலம் தொடர்புடைய பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரகப்பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு சமமாக வளர்ந்து வருகின்றன. எனவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும். நகர்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர். திடக்கழிவு மேலாண்மை. திரவக்கழிவு மேலாண்மை, பொது/சமுதாய பயன்பாட்டிற்கான நவீன கழிப்பிடங்கள். பாதாளச் சாக்கடை கட்டமைப்பு. ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி மதுரை. திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன். 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும். திருவாரூர் திருவள்ளூர் சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும். தனித்தும் கன்னியாகுமரி அரூர். பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு. காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும். 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தக்க சட்டவகைமுறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சியாக அமைந்துள்ள பகுதிகளை (contiguous areas) ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post