திருமணங்களை ஆன்லைனில் ஈஸியா பதிவு செய்யலாம்.. பத்திரப்பதிவு ஆபீஸுக்கு போக வேணாம்.. சபாஷ் தமிழக அரசு

post-img
சென்னை: புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள், திருமணத்தை ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் துவங்க என்ன காரணம்? இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா? கடந்த 2009-ல் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி, பத்திரப்பதிவு அலுவலகங்களிலேயே திருமணங்களை செய்து கொள்ளலாம்.. இந்த சட்டத்தின் கீழ், திருமணங்களை பதிவும் செய்து கொள்ளலாம். திருமண சட்டம்: அதாவது, திருமணம் முடிந்த தம்பதிகள் 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசின் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கமுடியாது. 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின் எப்போதுமே தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்ய இயலாது. திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்கவும் இந்த சட்டம் வழிவகுத்துள்ளது. ஆனால், திருமணம் நடைபெறும் பகுதியிலுள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே இத்தகைய திருமணத்தை பதிவு செய்ய முடியும். சட்டதிருத்தம்: எனவே, கடந்த 2020ல் இந்த சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன்படி, மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்திலும் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்பதே அந்த திருத்தம். ஆனாலும்கூட, இதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. மிக குறைவான திருமணங்களே பதிவு செய்யப்பட்டன. அதாவது, பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள், காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்கிறார்களாம். தமிழக அரசு: இந்த அளவுக்கு குறைவான திருமணங்கள் பதிவாவதற்கு என்ன காரணம் என்பதை தமிழக அரசு ஆய்வு செய்தது. அப்போதுதான் பதிவுத்துறையில் பெறும் சான்றிதழில் சிக்கல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, திருமண பதிவுக்கு ரூ.200 கட்டணமாக உள்ள நிலையில், ரூ.10 ஆயிரம் வரை பொதுமக்களிடம் லஞ்சமாக கேட்கிறார்களாம். வெறும் 200 ரூபாய்க்கு ரூ.10000 செலுத்த முடியாமல்தான், பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது அரசுக்கு தெரியவந்து. அதனால்தான், இந்த முறைகேடுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு இப்போது முடிவு செய்துள்ளது.. அதன்படி, பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர போகிறதாம்.. இந்த புதிய முறைப்படி, தம்பதிகள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வர தேவையில்லை. பத்திர எழுத்தர்கள் மூலமாக அல்லாமல் தாங்களே நேரடியாக வீட்டிலிருந்து பதிவு செய்யலாம். இதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி விடலாம். புதிய வழிவகை: திருமணத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக சான்றிதழும் வழங்கப்பட்டுவிடும். இந்த திட்டம் முதலில் தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும் என்றும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். பத்திரப் பதிவுத்துறையில் தற்போதுள்ள ஸ்டார்-2 சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டு, விரைவில் ஸ்டார்-3 கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வரும்நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளன. இந்த புதிய சாப்ட்வேரில்தான் இனிவரும் திருமண பதிவுகளை பொதுமக்களே மேற்கொள்ள போகிறார்களாம். எதிர்பார்ப்பு: அந்தவகையில், இந்த ஆன்லைன் திருமணப்பதிவு வதியானது, மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, இந்த பதிவுகள் மூலம் மோசடி திருமணங்கள் தடுக்கப்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைப்படியும் முறையாக திருமணங்கள் பதிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு நம்புகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post