விஜய் ஆளுநரை சந்தித்தார்! பேட்டி கொடுக்காமலேயே சென்றுவிட்டார்! இதுதான் எலைட் அரசியல்! வன்னியரசு

post-img
சென்னை: ஆளுநரை சந்தித்துவிட்டு பேட்டி எதும் கொடுக்காமல் தவெக தலைவர் விஜய் சென்றதற்கு பெயர்தான் எலைட் அரசியல் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார். இதுகுறித்து வன்னியரசு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் தில்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம். இப்போது தவெக தலைவர் நடிகர் திரு. விஜய் அவர்களை வைத்து அரசியல் செய்கிறது. ஆளுனர் ரவி அவர்களை திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார். ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் Elite அரசியல். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post