சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைங்க! செப்டிக் டேங்க் அருகே தயாராகும் உணவு! ஷாக்கில் மதுரை ஜிஎச்!

post-img
மதுரை: நடிகர் சூரிக்குச் சொந்தமான மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மன் கேண்டீனுக்கு சீல் வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் பறந்துள்ளன. இதனால் சூரிக்கு சிக்கல் எழுந்துள்ளது. நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையில் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. அந்த வகையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் விடுதிக்கான கழிவுநீர் தொட்டி அமைந்துள்ள பகுதி அருகே அம்மன் உணவகத்தினர் ஆக்கிரமித்துள்ளதோடு, அதன் அருகே சமைக்க தேவையான காய்கறியை வெட்டுதல், உணவுப் பொருட்களைத் தயாரித்தல், பாக்கெட் போடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்துள்ளார். அந்த இடத்தில் எலி, கரப்பான்பூச்சி, பல்லி போன்றவை நடுமாடும் அளவுக்கு தரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. இதனால் நோய் தொற்று உருவாக வாய்ப்புள்ளது. இந்த மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், புறநோயாளிகள், உள் நோயாளிகள் என அம்மன் உணவகத்திற்கு வந்து உணவு சாப்பிடுகிறார்கள். இது போல் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் உடல்நலம் பாதிக்கப்படும் சூழல் நிலவியது. எனவே தரமற்ற முறையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வரும் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும். அப்படி சீல் வைக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என மனு அளித்துள்ளனர். இதுகுறித்து உணவகம் கூறியிருப்பதாவது: காழ்ப்புணர்ச்சி காரணமாக யாரோ தூண்டியதால் இப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post