சங்கு அறுத்த சாவித்ரி.. பலரிடம் உறவு கொள்ள சொல்லி.. மகளை சீண்டிய கணவனை.. கண்டம் துண்டமாக வெட்டி.. ஆஆ

post-img
பெங்களூர்: நாளுக்கு நாள் டார்ச்சர் செய்து வந்த கணவனை பலவருட காலமாகவே பொறுத்துக் கொண்டார் சாவித்ரி.. ஆனால் பெற்ற மகளையே சீண்டவந்தபோது, கொதித்தெழுந்து கணவரின் கதையையே முடித்துவிட்டார். என்ன நடந்தது கர்நாடகாவில்? கர்நாடக மாநிலம், பெலகாவி, சிக்கோடியின் உமராணி என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ஸ்ரீமந்த் இட்னாளே - சாவித்திரி.. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது சாவித்ரிக்கு 35 வயதாகிறது. சாவித்ரி: விவசாய கூலி வேலை செய்யும் ஸ்ரீமந்த், மதுப்பழக்கத்தக்கு அடிமையானவர்.. தினமும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து சாவித்ரியை கொடூரமாக அடித்து உதைப்பதையே வழக்கமாக வைத்திருப்பவர். இந்நிலையில், பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஸ்ரீமந்த் ஆசைப்பட்டார். ஆனால், கூலி வேலை செய்வதால், பைக் வாங்கும் அளவுக்கு கையில் போதுமான பணம் ஸ்ரீமந்திடம் இல்லை. எனவே, பலருடன் உல்லாசமாக இருந்து, பணத்தை வாங்கிவரும்படி, சாவித்திரியை கொடுமைப்படுத்த துவங்கியிருக்கிறார். இதற்கு சாவித்திரி மறுத்து வந்த நிலையில், தினமும் இதையே சாக்காக வைத்து சரமாரியாக தாக்கி வந்துள்ளார். உல்லாசம்: இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் வீட்டுக்கு குடிபோதையில் வந்தார் ஸ்ரீமந்த்.. அப்போது உல்லாசமாக இருக்க மனைவியை அழைக்க, அதற்கு அவர் மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால், தன்னுடைய 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார் ஸ்ரீமன். அளவுக்கு அதிகமான தன்னை கொடுமை செய்தபோதும் பொறுத்துக் கொண்ட சாவித்ரி, தன்னுடைய மகளை, கணவன் சீண்ட சென்றதுமே உச்சக்கட்ட ஆவேசம் அடைந்தார். அங்கிருந்த பெரிய கல்லை எடுத்துவந்து, ஸ்ரீமனின் மண்டையிலேயே ஓங்கி அடித்தார். இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் ஸ்ரீமன்.. அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அரிவாளை எடுத்து வந்து, கணவரின் உடலை இரண்டாக வெட்டினார். சிறிய டிரம்: ஆனால், சடலத்தை எப்படி மறைப்பது என்று தெரியாமல் விழித்த சாவித்ரி, வீட்டிலிருந்த சிறிய டிரம்மில் அந்த சடலத்தின் துண்டுகளை போட்டார். பிறகு அந்த டிரம்மை உருட்டியபடியே, வீட்டுக்கு பக்கத்திலிருந்த வயல்வெளிக்கு கொண்டு வந்தார். டிரம்மிலிருந்த துண்டுகளை, எடுத்து வயலில் வீசியெறிந்தார். கொலை செய்ய பயன்படுத்திய அம்மிக்கல், கத்தியையும் அதே கிணற்றில் போட்டார். பிறகு டிரம்மை சுத்தமாக கழுவி, அதையும் விவசாய கிணற்றில் போட்டுவிட்டார்.. வீட்டில் ரத்தக்கறை படிந்த மெத்தை, உடைகளை அனைத்தையும் கல்லைக்கட்டி, அதே கிணற்றில் போடுவிட்டார். வீடு முழுவதும் விழுந்த கிடந்த ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்தார்.. பிறகு ஆடைகளை எல்லாம் தீ வைத்து நெருப்பிலிட்டார்.. அந்த சாம்பலை அள்ளிக்கொண்டு போய் குப்பை தொட்டியில் வீசினார்.. பெண் குழந்தைகள்: நடந்த சம்பவத்தை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று 2 தன்னுடைய பெண் பிள்ளைகளிடமும் சொல்லி வைத்தார். கணவரின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.. இவ்வளவையும் செய்து முடித்துவிட்டு, தன்னுடைய உடம்பிலிருந்த ரத்தக்கறை நீங்க சுத்தமாக குளித்து முடித்தார் சாவித்திரி. ஆனால் பொழுது விடிந்ததுமே, வயலில் கிடந்த ஸ்ரீமந்த் உடலை, அந்த கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. உடனடியாக சிக்கோடி போலீசுக்கும் தகவல் சொன்னார்கள்.. இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணையில் இறங்கினார்கள்.. வாக்குமூலம்: முதல் விசாரணையை சாவித்திரியிடம் ஆரம்பித்தனர். ஆனால் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னார் சாவித்திரி. பலமுறை கேட்டும் ஒரே பதிலை சாவித்ரி சொல்லி கொண்டிருந்தார். இறுதியில் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, "என் கணவனை போல எங்குமே யாரையும் பார்த்திருக்க முடியாது.. குடிப்பதற்கு பணம் கேட்டு தினம் தினம் டார்ச்சர் தந்து வந்தார். பணத்துக்காக என்னை பல ஆண்களுடன் உறவு கொள்ள சொன்னார். தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயன்றார். என்னுடைய மகளை காப்பாற்ற வேறு வழி தெரியல.. நான்தான் என் கணவரை வெட்டி கொன்றேன்.. ஆனால், நான் ஜெயிலுக்கு போயிட்டால், என் பிள்ளைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள்.. என்னை விடுங்கள்" என்று கதறி அழுதார். எனினும் போலீசார் சாவித்ரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post