மனுஷனாகவே மதிக்கவில்லை.. பணம்தான் முக்கியம்? சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து? என்ன நடக்கிறது?

post-img
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன. இந்தியாவில் தற்போது விவாகரத்து வழக்குகள், விவாகரத்து தொடர்பான செய்திகள் கவனம் பெற்று வருகின்றன. அதேபோல் விவாகரத்து ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளும் கவனம் பெற்று வருகின்றன. தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள், பல ஆண்டுகளாக திருமண உறவில் இருந்தவர்கள் கூட விவாகரத்து செய்ய தொடங்கி உள்ளனர். சினிமா திரை உலகை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது நீண்ட கால காதலி, மனைவி சைந்தவியை விவாகரத்து செய்தார். இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் மனஸ்தாபம் காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். அதேபோல் இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி இதேபோல் விவாகரத்து செய்தார். இது போக நடிகை சமந்தா - நாக சைத்தன்யா, நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து விவகாரத்து செய்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.அதன்படி சாஹல் - தனஸ்ரீ இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவகாரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. நேற்று சாஹல் வைத்த இன்ஸ்ட்டா ஸ்டோரி ஒன்றில்.. நான் கடினமாக உழைத்தேன். என் கடின உழைப்பு மூலமே நான் இந்த இடத்திற்கு வந்தேன். நான் அப்பா - அம்மாவிற்கு நல்ல மகனாக இருந்தேன். அப்படியே எப்போதும் இருப்பேன் என்பதாக ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் விவகாரத்தை முன்னிட்டு செய்த போஸ்ட்டாக கருதப்படுகிறது. இதில் தனஸ்ரீ மீது சில கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ தனது கணவரை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. அவரை தூக்கி சுற்றுவது.. நண்பர்கள் முன் அவமதிப்பது போல பேசுவது என்று தனஸ்ரீ மிக மோசமாக நடந்து கொண்டார். தனஸ்ரீ சாஹலை பெரிதாக மதிக்கவில்லை. மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல சாஹல் வசீகரமாக இல்லை என்று தனஸ்ரீ நினைத்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனஸ்ரீ - ஷ்ரேயாஸ் ஐயர் இடையே நட்பு நெருக்கமாக இருப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் வேறு ஒரு இளைஞரை தனஸ்ரீ டேட்டிங் செய்து வருவதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ அவரின் கணவர் சாஹல் உடல் இருந்தது எல்லாம் பணத்திற்காக மட்டுமே என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன. இணையத்தில் வைக்கப்படும் இந்த புகார்களுக்கு இதுவரை தனஸ்ரீ தரப்பில் இருந்து பதிலோ மறுப்போ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post