சீனாவில் பரவும் அதே உருமாற்றம் அடைந்த HMPV வைரஸா? பெங்களூர் சிறுமிக்கு.. HMPV பாதிப்பு வந்தது எப்படி

post-img
பெங்களூர்: சீனாவில் பரவும் HMPV இந்தியாவிற்கும் பரவி உள்ளது. ஆனால் பெங்களூரில் பதிவான இந்த கேஸ்.. சீனாவில் பரவும் அதே உருமாற்றம் அடைந்த வைரஸின் கேஸா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. குழந்தை காய்ச்சல் காரணமாக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தப் பரிசோதனையில் அவருக்கு HMPV வைரஸ் இருப்பது தெரியவந்தது. ஆனால், இது குறித்து கவலைப்படத் தேவையில்லை என, கர்நாடகாவின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஹர்ஷா குப்தா தெரிவித்து உள்ளார். HMPV வைரஸ் ஏற்கனவே இந்தியாவிலும் உள்ளது. இந்தியாவிற்கு புதிது கிடையாது. ஆனால் இப்போது ஏற்பட்ட வைரஸ் சீனாவில் பரவும் அதே உருமாற்றம் அடைந்த வைரஸா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் பரவும் உருமாற்றம் அடைந்த வைரஸின் ஜீனோம் எப்படி இருக்கும் என்று இந்தியாவிற்கு இதுவரை தெரியாது. சீனா இந்த விவரங்களை இன்னும் உலக சுகாதார மையத்திடம் முழுமையாக பெறவில்லை. எனவே, பெங்களூரில் கண்டறியப்பட்ட வைரஸ் சாதாரண HMPV வைரஸா அல்லது சீனாவில் பரவும் வகையா என்று மருத்துவர்கள் விசாரித்து வருகின்றனர். சாதாரண எச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் 0.78 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது. அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அது சீனாவில் பரவும் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் ஆக இருக்க வாய்ப்புகள் குறைவு. சீனாவில் இளைஞர்கள் இடையே முக்கியமாக சிறுவயதை சேர்ந்தவர்கள் இடையே இது அதிகம் ஏற்படுகிறது. கொரோனா எப்படி பூமர் வைரஸ் என்று அழைக்கப்பட்டது.. அப்படி இது ஜென் ஆல்பா வைரஸ் என்று அழைக்கும் வகையில்.. வயது குறைவானவர்களை இந்த வைரஸ் அதிகம் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் சில நாட்களில் குணமடைவார்கள், இருப்பினும் கடுமையான நோய்களுக்கு மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கலாம். அந்த வகையில் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த குழந்தையின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். HMPV இருமல் அல்லது தும்மல், தொடுதல் அல்லது கைகுலுக்குதல் போன்ற நெருங்கிய தொடர்பு மூலம் பரவும். அசுத்தமான இடங்களில் இந்த வைரஸ் இருக்கலாம், வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலம் பரவும், நீர்த்துளிகள் மூலம் பார்வையும். இதனால் மாஸ்க் போடுவது பலன் அளிக்கும். HMPV 2001 இல் கண்டுபிடிக்கப்பட்டது. HMPV ஆனது நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த குடும்பத்து வைரசுகள் பொதுவாக சுவாசம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். பொதுவான சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டு இருக்கும். மூச்சு விடுவதில் அதிக சிரமத்தை ஏற்படுத்தும். HMPV மற்றும் பிற சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறைந்தது 20 வினாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். கழுவப்படாத கைகளால் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும் . நெரிசலான இடங்களில் மாஸ்க் அணியவும். நோய்வாய்ப்பட்டால் வீட்டிலேயே இருங்கள், இதனால் வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம். அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை தவறாமல் சுத்தம் செய்யுங்கள் Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post