அமித்ஷாவை காப்பாற்ற பெரியாரை திட்டமிட்டே கேவலப்படுத்தி பேசிய சீமான்.. போட்டுடைத்த சுப.வீரபாண்டியன்

post-img
சென்னை: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டில் எழுந்த உக்கிரமான எதிர்ப்பை திசை திருப்ப திட்டமிட்டே தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசுவதற்காக சீமான் பொதுக் கூட்டத்தை நடத்தியதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது: பெரியாரின் பிள்ளை; மார்க்சின் மாணவன்; தம்பியின் தம்பி என்று என்கிற அறிமுகத்துடன் எங்கள் மேடைக்கு வந்த ஒரு இளைஞன் (சீமான்) கண்டிப்பாக கொள்கையாளனாக வருவான் என என்னால் நம்பப்பட்ட ஒரு தம்பி இப்படி இத்தனை பேருக்கு கேலிப் பொருளாகி இருக்கிறாரே என்கிற வருத்தம் எனக்கு உண்மையாகவே இருக்கிறது. விஜய் என்கிற நடிகர் வந்த பிறகு தம்மிடம் இருக்கிற வாக்குகளின் அளவு குறைகிறது என்பதை சீமானால் புரிந்து கொள்ள முடிகிறது.அதுமட்டுமல்லால் உளவுப் பிரிவின் அறிக்கை நம் அரசுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் போகும்.. அவருக்கும் தெரியும்.. சீமான் தமக்கு 8% வாக்கு இருக்கிறது என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதற்கு காரணமே, இப்போதே அது 5%-க்கும் கீழே வந்துவிட்டது என்பது உளவுத்துறையின் அறிக்கை. 2026-ம் ஆண்டு தேர்தலில் சீமானுக்கு 1% வாக்குகள் கூட வராது. எனவே, தன்னைப் பற்றி எல்லோரும் பேச வேண்டும்; மலிவான விளம்பரத்தால் தாம் மீண்டும் பேசப்பட வேண்டும் என்பது சீமானின் நோக்கம். சீமான் இனி எப்பாடுபட்டாலும் இனிஒருநாளும் 1% வாக்கு கூட பெற முடியாது. உங்கள் வரலாறு முடிந்து போய்விட்டது. ஏறத்தாழ கலகலத்துப் போன கட்டத்தில்தான் இன்றைக்கு அவர் தன்னை வளர்த்துக் கொள்ள பேசுகிறார்;. கடந்த 20-ந் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் பாரதிக்கு பிறந்த நாள் விழா நடத்தினார் சீமான். இந்த நிகழ்ச்சியில்தான் தந்தை பெரியாரைப் பற்றி சீமான் அத்தனை இழிவாகப் பேசினார். கடந்த 20-ந் தேதி பேசியதற்காக எதற்கு 15 நாட்கள் கடந்து இப்போது சீமானைக் கண்டித்து கூட்டம் போடுகிறீர்கள்? என கேட்கிறார்கள். இதற்கு காரணம் இருக்கிறது. எப்போதும் நாம் தமிழர் கட்சியினர் பிறந்த நாளைக் கொண்டாடுவது இல்லை; நினைவு நாளைத்தான் கொண்டாடுவோம் என்பார்கள். கடந்த டிசம்பர் 11-ந் தேதி பாரதியின் நினைவு நாள் இல்லை.. பிறந்த நாள்தான். நினைவுநாளை மட்டுமே போற்றுவோம் என்கிற நாம் தமிழர் கட்சியினர் பிறந்த நாளைப் போற்றினர்.அதுவும் பாரதி பிறந்தது டிசம்பர் 11. அவர்கள் விழா நடத்தியது டிசம்பர் 20. ஏன் இந்த இடைவெளி? ஏனெனில் பாரதிக்காக நடத்தப்பட்ட விழாவே அல்ல அது. டிசம்பர் 17-ந் தேதிதான் அமித்ஷா, அம்பேத்கரைப் பற்றி தவறாகப் பேசினார். அமித்ஷாவுக்கு எதிராக எதிர்வினைகள் எழுந்தன. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அதனைக் கண்டித்தார். இப்போது அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது..... பேச்சு முழுவதும் அம்பேத்கரைப் பற்றி போய்விடாமல் பெரியாரைப் பற்றி கேவலமாகப் பேசினால் அதற்கு விடை சொல்வார்கள் என நம்பினார்கள். இதனை சீமான் தமது பேச்சிலேயே சொல்கிறார். 'சண்டாளன் பேச்சுக்கு ஏற்படாத பரபரப்பு இப்போது வந்திருக்கும் என்றுதான் சீமான் பேசினார். அவர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே அடுத்த நாள் நான் பேசவில்லை; 15 நாட்கள் இடைவெளிவிட்டு இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். உன் கூட்டத்துக்கும் ஒரு நோக்கம் உண்டு; எங்கள் கூட்டத்துக்கும் ஒரு நோக்கம் உண்டு. இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post