தாய்லாந்து நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோ கெமிக்கல் துறையில் கால்பதித்த அதானி

post-img
காந்தி நகர்: இந்தியாவில் முன்னணி தொழிலதிபராக உள்ள கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் புதிய தொழிலில் கால்பதித்துள்ளது. அதன்படி பெட்ரோ கெமிக்கல்ஸ் சார்ந்த பிசினஸ்க்காக தாய்லாந்து நாட்டின் இந்தோராமா ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் கவுதம் அதானி. இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கவுதம் அதானி அதானி குழுமம் மூலம் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக அவர் பெட்ரோ கெமிக்கல்ஸ் சார்ந்த தொழிலில் ஈடுபட முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக குஜராத் மாநிலம் முந்த்ராவில் பெட்ரோ கெமிக்கல் கிளஸ்டரை உருவாக்கி உள்ளார். இந்த ஆலையின் மொத்த மதிப்பு சுமார் ரூ.35 ஆயிரம் கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலைக்கு தேவையான மின்சாரம் காற்றாலை மற்றும் சூரியஒளியின் மூலம் பூர்த்தி செய்யும் வகையில் ஆலைகள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பெட்ரோ கெமிக்கல் தொழிலில் கால்பதிக்கும் வகையில் அதானி குழுமம் தாய்லாந்து நாட்டின் இந்தோராமா ரிசோர்சஸ் லிமிடெட் உடன் கைகோர்த்துள்ளது. இதுதொடர்பாக அதானி குழுமத்தின் ஒன்றான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் இந்தோராமா ரிசோர்சஸ் லிமிடெட் உடன் இணைந்து செயல்பட உள்ளது. இருநிறுவனங்களும் தலா 50 சதவீத பங்குகளை வைத்திருக்கும் Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post