பொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை.. 93 ஆயிரம் வரை சம்பளம்.. அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

post-img
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூகோ வங்கியில், சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் 48 ஆயிரம் முதல் 93 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூகோ வங்கி. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வங்கி கிளைகள் உள்ளன. தமிழகத்திலும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இந்த வங்கி உள்ளது. இந்த வங்கிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும். யூகோ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் மூலமாகவும் நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். பணியிடங்கள் விவரம்: எகனாமிஸ்ட் - 02 தீ அணைப்பு பாதுகாப்பு அதிகாரி - 02 பாதுகாப்பு அலுவலர் - 08 ரிஸ்க் ஆஃபிசர் - 10 ஐடி ஆஃபிசர் - 21 சிஏ - 25 என மொத்தம் 68 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை துறை சார்ந்த பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். பி இ/ பிடெக், எம்பிஏ, எம்.எஸ்.சி, எம்.சி.ஏ ஆகிய படிப்புகள் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி பற்றிய விவரங்கள் கீழே உள்ள தேர்வு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. வயது வரம்பு: எகனாமிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இதர பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 22 வயது முதல் 35 வயதுக்குட்ப்பட்டவராக இருத்தல் அவசியம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். சம்பளம் எவ்வளவு?: எகனாமிஸ்ட்: ரூ. 48,480 - 85,920/- தீ அணைப்பு அதிகாரி & செக்யூரிட்டி ஆஃபிசர்: ரூ. 48,480 - 85,920/- ரிஸ்க் ஆபிசர் & ஐடி ஆபிசர் & சிஏ: ரூ.64,820 - 93,960/- விண்ணப்பிப்பது எப்படி?: தேவையான கல்வி தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://ucobank.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 27.12.2024 to 20.01.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ucobank.com/documents/20120/388920/RECRUITMENT+OF+SPECIALIST+OFFICERS+ON+REGULAR+BASIS+2025-26.pdf/3e9eed89-cca1-0ced-3aa2-f723af4bd19d?t=1735300386118

Related Post