குழந்தைகளை கூடுதலாக தோசை சாப்பிட வைக்க இந்த டிஷ் ட்ரை பண்ணி பாருங்க..!

post-img

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தோசை என்பது பிடிக்கும். அதுவும் நெய் ஊற்றி கொஞ்சம் மிதமான தீயில் வைத்து மொறுமொறுப்பாக மாறும் வரை பொறுத்திருந்து அதை உடைத்து சாப்பிடும்போது இருக்கும் சுகமே சுகம். அந்த தோசைக்கு எவ்வளவு பொன் கொடுத்தாலும் ஈடாகாது.

அதிலும் கூடுதலாக தோசைக்கு நடுவில் காரசாரமான மசாலா எதாவது போட்டு அதை அப்படியே சட்டுவத்தை(தோசை திருப்பியை)  வைத்து தோசையில் உள்ள மூலை வரை மசாலாவை பரப்பி சூடாக இருக்கும்போது அதை சுருட்டி கொடுத்தால் பசி இல்லாதவனுக்குக் கூட பசி வந்துவிடும்.

அப்படி நாவில் எச்சில் ஊறவைக்கும் காளான் நெய் ரோஸ்ட் மசாலைவை தான் இப்பொது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். அதுவும் மங்கோலியாவில் இறைச்சியால் செய்யப்படும் கறிக்கு நிகரான சைவ சுவை தரும்.

காளான் நெய் ரோஸ்ட் செய்யத் தேவையான பொருட்கள்

    • 4-6 கருப்பு மிளகுத்தூள்

 

    • 2 கிராம்பு

 

    • 6 காய்ந்த மிளகாய்

 

    • 1/4 தேக்கரண்டி வெந்தயம்

 

    • 1 தேக்கரண்டி சீரகம்

 

    • 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்

 

    • 5-6 பூண்டு கிராம்பு

 

    • 3 டீஸ்பூன் புளி விழுது

 

    • 4 தேக்கரண்டி நெய்

 

    • 4-6 கறிவேப்பிலை

 

    • 1 கிண்ணம் காளான்

 

  • ருசிக்கேற்ப உப்பு
 காளான் நெய் தோசை மசாலா செய்யும் முறை:
 

ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறுடன் காளான்களை சேர்த்து கலந்து சிறிதுநேரம் ஊறவிடவும். பின்னர் மிதமான தீயில் ஒரு ஆதி கனமான பாத்திரத்தில் காய்ந்த மிளகாய், மிளகு, கிராம்பு, வெந்தயம், கொத்தமல்லி விதைகள் மற்றும் சீரகம் சேர்க்கவும். சுமார் ஐந்து நிமிடங்கள் பொறுமையாக மணம் வரும்வரை வறுக்கவும்.

பின்னர் அதை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் வறுத்த மசாலா, பூண்டு பல், புளி விழுது சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிருதுவான பேஸ்டாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கடாயை மிதமான தீயில் சூடாக்கவும். இதனுடன், நெய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

பொரிந்ததும் அரைத்துவைத்த மசாலாவை சேர்த்து நிறம் மற்றும் பச்சை வாசம் போகும் வரை மெதுவாக கிளறவும். அடுத்து, மாரினேட் செய்யப்பட்டுள்ள காளான்களைச் சேர்த்து சமைக்கவும். மசாலா காளானில் ஏறி அதில் உள்ள தண்ணீர் வெளியேறி சமையலுக்கு தேவையான தண்ணீரை அதுவே தரும்.

அந்த நீரில் மிதமான தீயில் காளானை வேக விடவும்.

காளான்கள் வெந்ததும்,  சிறிது வெல்லம் சேர்த்துக் கலக்கவும்.  வந்து முடித்தான் அடையாளம் முதலில் போட்ட நெய் கலனில் இருந்து பிரிந்து மேல தனியாக தெரியும். இந்த நிலை வந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கிவிடலாம்.

 
பின்னர் தோசை சுடும்போது இந்த மசாலாவையும் சேர்த்து பரப்பி பரிமாறி பாருங்கள், உங்கள் குழந்தைகள் கூடுதலாக 2 தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Related Post