புதுச்சேரி எம்.ஜி. சாலையில் சின்ன மணிக்கூண்டு பகுதியில் பாட்டி பஜ்ஜி கடை உள்ளது. இந்த கடையை நடத்தி வரும் ராஜம் பாட்டி எந்நேரமும் படு பிஸியாவே மீன்களை ஃபிரை செய்து வருகிறார். சுடச்சுட மீன் பஜ்ஜியை சுவைப்பதற்காகவே இந்த கடையில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
முக்கியமாக இங்கு முள் இல்லாத மீன் வகைகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் மீன் முள் குத்தும் என்று பயப்பட தேவையில்லை. இந்த கடையில் பல வகையான மீன்கள், நண்டு, இறால் பஜ்ஜி எல்லாம் ரொம்ப கம்மி விலையில் கிடைக்கும். பொதுவாகவே இந்த மாதிரி சாலையோர கடைகள் என்றாலே சுகாதாரமாக இருக்காது என்று ஒரு எண்ணம் இருக்கும்.
ஆனால் இந்த கடையில் எப்போதும் ஃபிரெஷ் மீன்கள் மட்டும் தான் பயன்படுத்துகின்றனர். முக்கியமாக Fish Fry செய்யும் எண்ணெயை மறுநாள் பயன்படுத்த மாட்டேம் என்று ராஜம் பாட்டி கூறுகிறார்.
இந்த கடைக்கு வந்தால் இறால் Fry சாப்பிட miss பண்ணிடாதீங்க. ஒரு இறால், ஒரு உள்ளங்கை அளவுக்கு இருக்கும்.
ஒரு முறை பிரான்ஸ் நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஒருத்தர் இந்த பாட்டி கடையில் வந்து Fish Fryலாம் சாப்பிட்டு அந்த ருசி அவருக்கு பிடிச்சு போக, சிறந்த உணவகத்துக்கான பிரான்ஸ் நாட்டின் விருது இந்த பாட்டி கடைக்கு கொடுத்துருக்கின்றனர்.45 ஆண்டுகளாக புதுச்சேரி சின்னமணிக்கூண்டில் செயல்பட்டு வரும் இந்த பாட்டி பஜ்ஜி கடை புதுச்சேரியின் இன்னுமொரு அடையாளமாவே மாறியுள்ளது என்றே சொல்லலாம்.