பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.. பெங்களூர் டூ தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்.. பயணிகளே நோட் பண்ணுங்க!

post-img
பெங்களூர்: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்து வருகிறது. அதன்படி வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கும் என 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் எத்தனை மணிக்கு புறப்படும்?, எந்தெந்த ரயில்களில் நின்று செல்லும் என்பது போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம். பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சொந்த ஊர்களில் உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதற்காக பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில், பேருந்துகளில் டிக்கெட்டுளை பயணிகள் பல மாதங்களுக்கு முன்பே புக் செய்து வைத்துவிட்டனர். சென்னையில் இருந்து மட்டும் லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், சென்னையில் இருந்து செல்லும் ரயில்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் ஹவுஸ் புல் ஆகிவிட்டன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த ரயில்களில் டிக்கெட் ஓபன் ஆகி சில நிமிடங்களில் விற்று காலியாகி விடுகின்றன. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட உள்ளன. பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:- பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு 10 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி இயக்கப்படும். பெங்களூர் SMVT ரயில் நிலையத்தில் இரவு 10 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கு 10.10 மணிக்கு வந்து சேரும். 2 நிமிடங்கள் இந்த ரயில் நிலையத்தில் நிற்கும். இரவு 10.12 மணிக்கு அங்கிருந்து கிளம்பும் ரயில் பங்கார்பேட் (இரவு 10.58) வழியாக சேலத்திற்கு அதிகாலை 3.23 மணிக்கு வந்து சேரும். சேலத்தில் 10 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில், அங்கிருந்து 3.33 மணிக்கு கிளம்பும். நாமக்கல் (அதிகாலை 4.28), கரூர் (5.18), திண்டுக்கல் (7:00) வழியாக மதுரைக்கு காலை 8 மணிக்கு வரும். மதுரையில் இருந்து 8.20 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கு காலை 11 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் 11 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் வழியாக மதுரைக்கு 3: 50 மணிக்கு சென்றடையும். மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு கிளம்பும் ரயில், திண்டுக்கல் (5 மணி), கரூர் (6.08), நாமக்கல் ((6.40), சேலம் (7:35), பங்க்கராபேட் (நள்ளிரவு 1 மணி), கிருஷ்ணராஜபுரம் (அதிகாலை 2.08) வழியாக பெங்களூர் கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 2.50 மணிக்கு செல்லும். மைசூருக்கு அதிகாலை 6.30 மணிக்கு இந்த ரயில் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post