திமுகவின் ஆ ராசா விட்ட வார்த்தை.. டென்ஷன் ஆன சிபிஎம்! மீண்டும் வெடித்த வார்த்தை மோதல்

post-img
சென்னை: ஆ ராசா பேசியது இணையத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அவர் சொல்வது மிக மிக தவறானது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்பாடுகள் எங்கு நீர்த்து போனது. நாங்கள் தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். எல்லாருக்கும் தெரியும். எனவே தலைவர்களின் செயல்பாடுகள் நீர்த்துபோனது என்று சொல்வது எல்லாம் ரொம்ப ரொம்ப தவறு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக இருந்த பாலகிருஷ்ணன் தமிழகத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்றும், தமிழக அரசு என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக சிபிஎம் கட்சிக்கு முரசொலி பத்திரிக்கையில், திமுகவினால் தான் சிபிஎம் கட்சி வெளிச்சம் பெற்று இருப்பதாக விமர்சித்து பதிவிட்டு இருந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதிய மாநில செயலாளராக பதவியேற்ற பெ சண்முகம் பதில் தெரிவித்து இருந்தார். அப்போது அவர், "திமுகவுடன் நிறைய நேரம் உறவாக இருந்து இருக்கோம். அதே நேரம் பல நேரங்களில் எதிர் அணியில் கூட இருந்து இருக்கிறோம். இவங்களால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்று சொல்வதெல்லாம் அதீத வார்த்தை. நிச்சயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தங்கள் பலத்திற்கு ஏற்ப மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் சமரசமற்ற போராட்டத்தை நடத்துகிறோம். இதன் மூலமாக தான் மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறதே தவிர, எதோ திமுக கட்சியின் வெளிச்சத்தில் தான் சிபிஎம் செயல்பட்டு வருவதாக திமுக தலைமை, முரசொலியில் செய்தி வெளியிட்டிருப்பது பொறுத்தமானது இல்லை" என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று பேசிய திமுக எம்பி ஆ ராசா, கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போய்விட்டது என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆ ராசா பேசியிருப்பது மிக மிக தவறு என்றும், நாங்கள் தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, பெ சண்முகம் கூறியதாவது:- மாநில அரசாங்கத்தை பொறுத்தவரை, தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். சொன்ன வாக்குறுதிகளை மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது. எனினும் 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒருசில தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமால் இருக்கிறது. எனவே 100 சதவிகிதம் திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எங்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். ஆ ராசா பேசியது தற்போது இணையத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ரொம்ப தப்பானது. அவர் சொல்வது மிக மிக தவறானது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்பாடுகள் எங்கு நீர்த்து போனது. நீங்க சொல்லுங்க.. நீர்த்துபோச்சா என்று.. சொல்லப்போனால்.. அதனை இப்போது சொல்ல விரும்பவில்லை. நாங்கள் தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். எல்லாருக்கும் தெரியும். எனவே தலைவர்களின் செயல்பாடுகள் நீர்த்துபோனது என்று சொல்வது எல்லாம் ரொம்ப ரொம்ப தவறு. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திமுக எம்பி ஆ ராசா கம்யூனிஸ்ட்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டதாகவும், இதனால் கம்யூனிச கொள்கைகள் நீர்த்துப் போய்விட்டதாகவும் கூறினார். ஆ ராசா பேசுகையில், "தத்துவங்கள் மீது தலைவர்களின் நம்பிக்கை குறைய தொடங்கிச்சுன்னா தத்துவம் தோற்றுவிடும். கம்யூனிசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.. இதுவரை கம்யூனிச கொள்கையில் எந்தவொரு கோளாறும் இல்லை.. கம்யூனிசம் செம்மையான கொள்கையாகவே இருக்கிறது. ஆனால், அதை முன்னெடுக்கும் தலைவர்கள் நீர்த்துப் போய்விட்டார்கள். சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள். இதனால் மக்களிடையே கம்யூனிச தத்துவங்கள் நீர்த்துப் போய்விட்டது. அதேநேரம் திராவிடம் அப்படி இல்லை. திராவிட தத்துவத்தை நமக்குப் பெரியார் கொடுத்தார். அதைப் பேரறிஞர் அண்ணா அரியணையில் ஏற்றினார். அதன் பிறகு வந்த கருணாநிதியும் திராவிட தத்துவங்களைத் திட்டங்களாகக் கொண்டு வந்தார்" என்று பேசினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post