கட்டிலுக்கு அடியில், பெட்டிக்குள் மனைவி.. வாயில் வெள்ளை பிளாஸ்திரி! ஸ்பா பியூட்டிஷியனின் கணவர் பகீர்

post-img
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்த இந்த சம்பவம், ஒட்டுமொத்த காவல்துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுதொடர்பான குற்றவாளியை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார், தீவிரமான விசாரணையை அவரிடம் மேற்கொண்டு வருகிறார்கள். டெல்லி ஜானக்புரியை சேர்ந்தவர் தன்ராஜ்... இவரது மனைவி பெயர் தீபிகா.. 26 வயதாகிறது.. தம்பதி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வருகிறாரகள்.. அந்த பகுதியில் செயல்படும், பியூட்டி ஸ்பா ஒன்றில் தீபிகா வேலை பார்த்து வருகிறார்.. ஆனால், தன்ராஜ் எந்த வேலைக்கும் போவதில்லை.. இரவு, பகல் என எந்நேரமும் தண்ணி அடிப்பதும், பைக்கில் ஊரை சுற்றி வருவதுமே முழுநேரமாக வைத்திருந்தார்.. பியூட்டி பார்லரில் வரும் பணத்தில்தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார் தீபிகா. எனினும், மது அருந்துவதற்கும், பைக்கில் ஊரை சுற்றுவதற்கும் தீபிகாவிடம் செலவுக்கு பணம் வாங்கி வந்துள்ளார் தன்ராஜ். இப்படிப்பட்ட சூழலில், தீபிகாவின் நடத்தையிலும் தன்ராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டது.. யாரோ ஒரு இளைஞருடன் தீபிகா நெருங்கி பழகுவதாக சந்தேகப்பட்டார்... அந்த நண்பருடன் பேசக்கூடாது என்றும், உடனடியாக அவருடனான நட்பை கைவிடும்படியும், தீபிகாவிடம் தொந்தரவு செய்ய துவங்கினார். ஆனால், தன்ராஜ் போதையில் பேசுவதை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் தீபிகா. துர்நாற்றம்: இந்நிலையில், தீபிகாவின் வீட்டில் இருந்து திடீரென குப்பென்ற துர்நாற்றம் வீசியிருக்கிறது.. இதனால் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் தீபிகாவுக்கு போன் செய்துள்ளனர். ஆனால், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர். இதையடுத்து, போலீஸார் தீபிகாவின் வீட்டுக்கு விரைந்து வந்து, கதவை திறந்து உள்ளே சென்றனர்.. அப்போது, பெட்ரூமிலிருந்த கட்டிலுக்கு அடியில், ஒரு பெட்டி இருந்தது.. அந்த பெட்டியை போலீசார் திறந்து பார்த்தபோது, தீபிகாவின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. வெள்ளை டேப்: அதுமட்டுமல்ல, உடல் சீக்கிரத்தில் அழுகிவிடக்கூடாது என்பதற்காக தீபிகாவின் வாயில் வெள்ளையாக டேப் ஒட்டப்பட்டிருந்தது.. இதையடுத்து தீபிகாவின் கணவர் தன்ராஜூக்கு போலீசார் போன் செய்தனர்.. ஆனால், அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால், தலைவாகியிருந்தவரை தேடும் பணி ஆரம்பமானது. அப்போதுதான், ஓரிடத்தில் ஆன்லைன் மூலம் தன்ராஜ் பணம் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தும்கூட, தன்ராஜை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மற்றொருபுறம் தீபிகா கொலை சம்பந்தப்பட்ட வழக்கையும் விசாரிக்க துவங்கினர். அந்தவகையில் கடந்த மாதம் 29ம் தேதியே தீபிகா படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.. நெருங்கிய நண்பர்: இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் அங்கிட் சொல்லும்போது, "தீபிகாவை கொன்றுவிட்டு, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி, வீசியெறிய பலநாட்களாக திட்டமிட்டு வந்தார் தன்ராஜ்.. இதற்காகவே, தன்னுடைய நெருங்கிய நண்பரின் உதவியையும் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது நண்பர், விஷயத்தை கேள்விப்பட்டு உதவிக்கு வர மறுத்துவிட்டார். அதனால், தீபிகாவை துண்டு துண்டாக வெட்டும் முடிவை கைவிட்டுவிட்டார் தன்ராஜ். இதற்கு பிறகு, எப்படி கொலை செய்வது? உடலை எப்படி துண்டு துண்டாக வெட்டுவது? என்பது குறித்தெல்லாம் ஏராளமான வீடியோக்களை கூகுளில் பார்த்துள்ளார். அதற்கு பிறகே தீபிகாவை கொலை செய்துள்ளார்.. பிறகு சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல், கட்டிலுக்கு கீழே வைத்துவிட்டு, நேராக ஆக்ரா சென்றுள்ளார். அங்கிருந்து டெல்லி வந்து அமிர்தசரஸ் சென்றுள்ளார்... அடுத்த கத்தி: பிறகு மனைவியை கொலை செய்ய காரணமான, அந்த ஆண் நண்பரையும் கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.. இதற்காக அமிர்தசரஸிலிருந்து கத்தியுடன் டெல்லிக்கு வந்து கொண்டிருந்தார்.. அப்போதுதான் போலீசார் தன்ராஜை சுற்றிவளைத்து கைது செய்தனர்.. இவ்வளவு விஷயத்தையும் தன்ராஜ் வாக்குமூலமாக சொல்லி உள்ளார்.. அவரிடம் தொடர் விசாரணை நடக்கிறது" என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post