ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமாவால் அடுத்து நடக்க போவது என்ன? கனடா- இந்தியா உறவு எப்படி இருக்கும்?

post-img
ஒட்டாவா: ஜஸ்டின் ட்ருடோ பதவி விலகியிருப்பதன் மூலம் இந்தியா- கனடா உறவில் இருந்த நிலை மாறுமா? கனடாவின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் இருக்குமா? வர்த்த உறவு எப்படி இருக்கும்? குடியேற்ற விதிகளில் மாற்றம் ஏற்படுமா? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.. கனடா பிரதமராக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார். புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் பிரதமராக நீடிப்பார். சொந்த கட்சிக்குள் அவருக்கு கிளம்பிய எதிர்ப்பு மற்றும் கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறியது உள்ளிட்ட காரணங்களால், ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார். கனடாவில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், தனது பதவியில் இருந்து விலகியிருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் ட்ரூடோ மோதல் போக்கை கையாண்டார். இதனால் இந்தியா - கனடா இடையேயான உறவில் இதுவரை இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டது. ஹர்தீப் சிங்க் நிஜ்ஜார் கொலைக்கு ட்ரூடோ இந்தியா மீது கை காட்டினார். ஆனால் இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. தங்கள் வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உறுதியான எந்த ஆதாரத்தையும் கனடாவால் வழங்க முடியவிலை. இந்த விவகாரத்தால் இந்தியா - கனடா இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ட்ரூடோ பதவி விலகியிருக்கிறார். இதனால், இந்தியா - கனடா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. ட்ரூடோ பதவி விலகியிருப்பதன் மூலம் வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் இருக்கும் என்பதை சூசகமாக காட்டும் விதமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவுடனான அணுகுமுறையில் மாற்றம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேவேளையில், ட்ருடோ நிலைப்பாட்டை அப்படியே பின்பற்றுவரை அடுத்த பிரதமராக லிபரல் கட்சி எடுக்குமா? அல்லது புதிய அணுகுமுறையை கையாள்பவரை தேர்வு செய்யுமா? என்பதுதான் பலரின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது. லிபரல் கட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டால், புதிய தலைவருக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான உறவை கையாள்வதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனினும் கன்சர்வேட்டி கட்சியின் பியார்ரே போலிவேரே பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் வெளியுறவுக்கொள்கை அப்படியே மாறிவிடும். ஏனெனில் இந்தியா உடனான உறவை ட்ரூடோ கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்தார் பியாரே போலிவேரே. எனவே இவர் தேர்வு செய்யப்படால் பெரும் மாற்றம் ஏற்படலாம்.. பொருளாதார உறவுகள் என எடுத்துக்கொண்டால் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி காலத்தில் இந்தியா -கண்டா வர்த்தக உறவு செழித்தோங்கியது. 8.4 பில்லியன் டாலர் அளவுக்கு இரு நாடுகளின் வர்த்தகமும் 2024 நிதி ஆண்டில் இருந்தது. மினரல் பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது ட்ரூடோ ராஜினாமா செய்து இருப்பதால், புதிய தலைமை எப்படி வர்த்தக உறவை மேனேஜ் செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வர்த்தக உறவை பாதிக்கும் வகையிலான ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்பதை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. குடியேற்ற விதிகளை எடுத்துக்கொண்டால் ஜஸ்டின் ட்ரூடோ கல்விக்கான பாஸ்ட் டிராக் விசா திட்டத்தை நிறுத்தும் முடிவை எடுத்தார். இது இந்திய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. கனடாவில் தற்போது 4,27,000- இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். குடியேற்ற விதிகளில் ட்ரூடோ எடுத்த நடவடிக்கைகள் இந்திய மணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாகவே இருந்தது. ஆனால், கன்சர்வேட்டிவ் கட்சியும் இந்த விவகாரத்தில் கடுமையான பார்வையயே கொண்டுள்ளது. போலிவேரே பிரதமராக பொறுப்பேற்றால் குடியேற்ற விதிகள் மேலும் கடுமையக்கப்படாலாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post