ஒன்னு இல்ல மொத்தம் 5.. தாங்குமா பூமி? நெருங்கும் விண்கற்கள்.. விஞ்ஞானிகள் ஷாக்!

post-img
நியூயார்க்: இன்றும் நாளை 5 விண்கற்கள் பூமிக்கு நெருக்கமாக வருகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதுள்ளனர். சைலன்டாக இது நம்மை கடந்து சென்றுவிட்டால் பிரச்னை கிடையாது, ஆனால் மோதினால் பேரழிவு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்னர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள க்ரெசென்டா பள்ளத்தாக்கில் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி அமைந்திருக்கிறது. இதுதான் பூமிக்கு அருகே வரும் விண்கற்கள் குறித்து எச்சரித்திருக்கிறது. 2024 YA10, 2024 BM1, 2024 PT5, 2024 YD13 மற்றும் 2024 YW9 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு நெருக்கமாக வரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 67 அடி அகலம், அதாவது ஒரு விமானத்தின் சைஸ் கொண்ட இந்த விண்கல் இன்று பூமியை நெருக்கமாக கடந்து செல்கிறது. இது 33 லட்சம் கி.மீ இடைவெளியில் கடந்து செல்கிறது. ஒருவேளை இது பூமி மீது மோதினால்.. கல் விழுந்த இடத்தில் 2 கி.மீ சுற்றளவுக்கு 100 மீட்டர் ஆழத்திற்கு பெரிய பள்ளம் உருவாகும். கல் விழுந்த இடத்தை சுற்றி 10-20 கி.மீ பரப்பளவுக்கு அதிர்வலைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எல்லா கட்டிடங்களும் நொறுங்கிவிடும். கடலில் விழுந்தால் மிகப்பெரிய அளவுக்கு சுனாமி ஏற்படும். இரண்டாவது விண்கல் 2024 BM1. இதுவும் 69அடி விட்டம் கொண்ட பெரிய விண்கல்தான். பூமியில் விழுந்தால் மேலே குறிப்பிட்டதை போன்ற பாதிப்புகளைதான் ஏற்படுத்தும். இந்த கல் பூமியை 44 லட்சம் கி.மீ தொலைவில் இன்று கடந்து செல்ல இருக்கிறது. ஒப்பீட்டளவில் மற்ற இரண்டு விண்கற்களை விட இது சைஸில் சின்னதுதான். வெறும் 36 அடிதான் இதன் விட்டம். ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை போல, இந்த விண்கல் விழுந்தாலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும். அதாவது கல் விழுந்த இடத்தில் 200 மீ சுற்றளவுக்கு 50 மீ ஆழத்திற்கு ஒரு பள்ளம் உருவாகும். இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் 1-5 கி.மீ சுற்றளவுள்ள எல்லா கட்டிடங்களையும் துவம்சம் செய்துவிடும். கடலில் விழுந்தால் சுனாமி கன்பார்ம். இந்த விண்கல் பூமியை நாளை 18 லட்சம் கி.மீ தூரத்தில் கடந்து செல்ல இருக்கிறது. இதன் சைஸ் 75 அடி. முதல் இரண்டு விண்கற்கள் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துமோ அதை விட பாதிப்பை இது ஏற்படுத்தும். மொத்தமுள்ள 5 விண்கற்களில் பெரியது என்றால் அது இதுதான். நாளை பூமியை சுமார் 56 லட்சம் கி.மீ தொலைவில் இது கடந்து செல்ல இருக்கிறது. கடைசி விண்கல் 2024 YW9, 60 அடி விட்டம் கொண்ட இது நார்மலான சைஸ் கொண்ட விண்கல்தான். முதல் இரண்டு கேட்டகிரியில் இதை வைக்கலாம். 10 லட்சம் கி.மீ தொலைவில் இது நாளை பூமியை கடந்து செல்ல இருக்கிறது. மேலே சொன்ன 5 விண்கற்களும் பூமியை சில லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது. சில லட்சம் கி.மீ தொலைவுதானே? என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். ஆனால், விண்வெளியை பொறுத்த வரை சில லட்சம் கி.மீ என்பது ரொம்ப சின்ன தொலைவு. அதாவது பூமிக்கு அடுத்து உள்ள செவ்வாய் கிரகம் 2 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. அப்படி எனில சில லட்சம் கி.மீ என்பது பூமிக்கு பாதுகாப்பான தொலைவு அல்ல. அதேநேரம், பூமியில் ஏற்கெனவே இருந்த டைனோசர் போன்ற பெரிய உயிரினங்களை அழைத்தது இந்த விண்கற்கள்தான். எனவே விண்கற்கள் மனிதர்களுக்கும் ஆபத்து என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post