இந்தியா உள்பட 9 நாடுகளிடம் மட்டும் அணுஆயுதம் இருப்பது ஏன்? பிற நாடுகளிடம் ஏன் இல்லை? இதுதான் மேட்டர்

post-img
டெல்லி: இந்த பூமியில் ஏராளமான நாடுகள் உள்ளன. ஆனால் அணுஆயுதம் என்பது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 9 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள நாடுகளிடம் அணுஆயுதம் என்பது இல்லை. ஏன் 9 நாடுகளை தவிர பிற நாடுகளிடம் அணுஆயுதம் இல்லை என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அணுஆயுதம்.. பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. ஒரு நாட்டு மக்களை முற்றிலுமாக அழிப்பதோடு, அடுத்தடுத்து தலைமுறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது தான் அணு ஆயுதம். இந்த அணுஆயுதம் ஜப்பான் மீது 2 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 1945ம் ஆண்டில் ஆகஸ்ட் 6 மற்றும் 9 ம் தேதிகளில் முறையே ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெிரக்கா அணுகுண்டு வீசியது. இதில் சுமார் 1 லட்சத்த 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இன்னும் ஏராளமானவர்கள் பல லட்சம் பேர் அணுகுண்டு தாக்குதலினால் மாற்றுத்திறனாளிகளாக மாறினர். அதன்பிறகு எந்த நாடுகளும் அணுஆயுதங்களை பயன்படுத்தவில்லை. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த போர் அடுத்த மாதம் பிப்ரவரி மாதத்துடன் 3வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த போரில் தான் அணுஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தலாம் என்று அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. அணுஆயுத தாக்குதல் என்பது அப்பாவி மக்களை பெரிதும் பாதிக்கப்படும் என்பதும் ரஷ்யாவும் அணுஆயுதத்தை வைத்து மிரட்டுமோ தவிர, அதனை வைத்து தாக்குதல் நடத்தும் முடிவை அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் எடுக்கமாட்டார் என்றே நம்பப்படுகிறது. இந்த உலகை பொறுத்தவரை 190க்கும் அதிகமான நாடுகள் உள்ளன. இதில் மொத்தம் 9 நாடுகளிடம் மட்டும் அணுஆயுதம் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் தான் அணுஆயுதம் உள்ளது. இந்த நாடுகள் நினைத்தால் மட்டுமே இன்னொரு நாட்டின் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தலாம். இந்த வேளையில் நமக்கு ஒரு கேள்வி எழலாம். உலகின் பல்வேறு நாடுகள் இருந்தாலும் கூட இந்த 9 நாடுகளிடம் மட்டுமே அணுஆயுதம் இருப்பது ஏன்? இந்த நாடுகளை விட பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடுகள் இருந்தாலும் கூட அந்த நாடுகளிடம் அணுஆயுதம் இல்லாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி எழலாம். இதற்கான விடை என்னவென்றால் என்பிடி எனும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (Nuclear Non - Proliferation Treaty) தான். இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் என்பது 1968 ம் ஆண்டில் வரையறுக்கப்பட்டது. 1970 ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் செயல்படும் பதினெட்டு நாடுகளின் ஆயுதக் குறைப்புக் குழுவால் இந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் நோக்கம் என்பது உலக நாடுகளை அணுஆயுத மிரட்டலில் இருந்து பாதுகாப்பது தான். அணு ஆயுதங்கள் அதிகரிப்பதை தடுப்பது, அணுஆயுத சோதனைகளை தடுப்பது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 190 நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் முன்பே அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அணுஆயுதங்களை தயாரித்துவிட்டன. இதனால் அந்த 5 நாடுகளும் அணுஆயுதங்களை வைத்திருப்பதில் இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேவேளையில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகும் கூட இந்தயிா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் அணுஆயுதங்கள் இல்லை. ஆனாலும் அந்த நாடுகள் எப்படி அணுஆயுதங்களை வைத்துள்ளன என்ற கேள்வி இப்போது எழலாம். இதற்கு இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் இருநாடுகளும் தனித்தனித்தனியாக சோதனைகளை மேற்கொண்டு அணுஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளன. அதேபோல் இந்த அணுஆயுத பரவல் தடை ஒப்பந்த்தில் வடகொரியா கையெழுத்திட்டு இருந்தாலும் கூட அமெரிக்காவுடனான மோதலால் அணுஆயுதங்களை அந்த நாடு உற்பத்தி செய்தது. அதன்பிறகு அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வடகொரியா விலகியது. இதனால் தான் உலகில் இந்த 9 நாடுகளிடம் மட்டுமே அணுஆயுதம் என்பது உள்ளது. மற்ற நாடுகளில் அணுஆயுதம் இல்லை. ஆனாலும் இஸ்ரேல் உடனான அதிகரித்து வரும் மோதலால் ஈரான் தற்போது அணுஆயுத சோதனைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் எப்ஏஎஸ் (FAS) எனும் Federation of American scientists சார்பில் எந்த நாடுகளிடம் அதிக அணு ஆயுதம் உள்ளது என்ற விபரம்ம் வெளியிடப்பட்டது. அதன்படி ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா என்று மொத்தம் 9 நாடுகளிடம் அணுஆயுதங்கள் உள்ளன. இந்த நாடுகளிடம் 12,121 அணுஆயுதங்கள் (Warheads) இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக ரஷ்யாவிடம் 5,580 அணுஆயுதங்களும், அடுத்தப்படியாக அமெரிக்காவிடம் 5,044 அணுஆயுதங்களும் உள்ளன. சீனாவிடம் 500, பிரான்ஸிடம் 290, பிரிட்டனிடம் 225, இந்தியாவிடம் 172, பாகிஸ்தானிடம் 170, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 50 என்று அணு ஆயுதங்கள் உள்ளன. அதன்படி பார்த்தால் உலகில் உள்ள மொத்த அணுஆயுதத்தில் 88 சதவீதம் என்பது ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய 2 நாடுகளிடம் தான் உள்ளது. அதில் 84 சதவீதம் என்பது ராணுவம் மற்றும் போர்க்கப்பல் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு 100 அணு ஆயுதங்களே போதும். ஆனால் இந்த பட்டியலில் இஸ்ரேல், வடகொரியாவை தவிர பிற நாடுகள் அனைத்தும் அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post