புத்தாண்டு 2025: வேளாங்கண்ணி, கன்னியாகுமரி போறீங்களா.. ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு

post-img
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கவுள்ளதை முன்னிட்டு, வேளாங்கண்ணி மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் பயணிகளின் வசதிக்காக திங்கள்கிழமை (டிசம்பர் 30) இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு பல்வேறு மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். அந்த வகையில், ஆண்டின் முதல் நாளை பாசிட்டிவாக தொடங்கும் வகையில் பிடித்த இடங்கள், கோயில்களுக்குச் சென்று மக்கள் புத்தாண்டைக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், புத்தாண்டை கொண்டாடுபவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது வேளாங்கண்ணியும், கன்னியாகுமரியாகவும் தான் இருக்கும். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணி மற்றும் கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் வருவது வழக்கம். கன்னியாகுமரி மற்றும் வேளாங்கண்ணிக்கு வரும் பயணிகளின் வசதிக்காக திங்கள்கிழமை (டிசம்பர் 30) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு செகந்திராபாத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை (டிசம்பர் 30) சிறப்பு ரயில் எண் 07125 இயக்கப்படுகிறது. செகந்திராபாத்தில் இரவு 8 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையவுள்ளது. மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து புதன்கிழமை (ஜனவரி 1) இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07126) மறுநாள் இரவு 10.45 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரயிலில் 6 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் குண்டூா், தெனாலி, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படவுள்ளது. அதேபோல, கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து டிசம்பர் 30, ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை தோறும்) மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07367) மறுநாள் பிற்பகல் 3.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 31, ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளில் இரவு 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07368) மறுநாள் இரவு 7.35 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயிலில் 8 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 5 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காவேரி, ஹரிஹா், பிரூா், யஷ்வந்த்பூா், பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post