ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்துக்காக 5 ஆண்டு போராட்டம்! மீட்டுக் கொடுத்த சோழர் கால செப்பு பட்டயம்! அதிசயம்!

post-img
நாகை: மன்னராட்சி காலத்தில் சொத்து பரிமாற்றங்களை ஆவணப்படுத்த பயன்படுத்தப்பட்ட சோழர்கால செப்பு பட்டயத்தால் நாகையை சேர்ந்த முதியவரின் சொத்து வருவாய்த்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. தனது இடத்தை மீட்க ஐந்து ஆண்டுகளாக போராடிய முதியவருக்கு 200 வருட சோழர்கால செப்பு பட்டயத்தால் கிடைத்த நீதி கிடைத்துள்ள நிலையில், அதிகாரிகளுக்கு அந்த முதியவர் நன்றி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 70 வயதான ராதாகிருஷ்ணன் பெயரில் அந்த பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினரின் மடம் அமைந்திருந்தது. இந்த நிலையில் இந்த மடத்தை 1996ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த உத்திராபதி என்பவரது பெயரில் சிலர் சட்ட விரோதமாக வகை மாற்றம் செய்து பெயர் மாற்றம் செய்துள்ளனர். காலப் போக்கில் தன்னுடைய நிலம் தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதை அறிந்த ராதாகிருஷ்ணன் நிலத்தை மீட்டு தர வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 வருடங்களாக போராடிய முதியவரின் மனுவை விசாரித்த நாகை கோட்டாட்சியர் அரங்கநாதன் மூலப் பத்திரம் உள்ளிட்ட சொத்து தொடர்பான ஆவணங்களை இரண்டு தரப்பினரையும் கேட்டு உத்தரவிட்டார். பழங்கால சொத்து என்பதால் உத்திராபதி தரப்பினரின் ஆவணங்கள் முறையாக இல்லாத நிலையில் பழமை வாய்ந்த செப்பு பட்டயத்தை முதியவர் ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்தார். அதனை ஆய்வு செய்த நாகை கோட்டாட்சியர் அரசு ஆவண குறிப்புகளை சோதனை செய்து, 200 ஆண்டுகாலதிற்கு முன்பு உருவாக்கப்பட்ட சோழர் காலத்து செப்பு பட்டயத்தை ஆதாரமாக ஏற்று ராதாகிருஷ்ணன் தரப்புக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். 5 ஆண்டுகளாக போராடி இந்த இடத்தை நான் மீட்டிருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ள முதியவர், சோழர் கால பட்டயத்தை ஆதாரமாக நான் வைத்துள்ள காரணத்தால் எனக்கு இந்த சொத்து கிடைத்திருக்கிறது என்றும், சொத்தை மீட்க உதவி செய்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார் முதியவர் ராதா கிருஷ்ணன். தற்போது பத்திரப் பதிவு ஆவணங்கள் அனைத்துமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. கணினி அல்லது செல்போன் இருந்தால் போதும் பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்டவற்ற நிலம் தொடர்பான ஆவணங்களை பார்ப்பதையோ அல்லது டவுன்லோடு செய்வதையோ நொடி பொழுதில் பெற்று விடலாம். அதற்கு முன்னதாக ஆவண அடிப்படையில் மட்டுமே பட்டா விபரங்கள் இருந்தது. அதற்கு முன்னதாக அதாவது சுமார் 100 முதல் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை செப்பு பட்டயம் வழங்கப்பட்டது. கோவில் அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு நிலத்தை தானமாகவோ அல்லது கிரையத்திற்கோ வழங்குபவர்கள் அதனை செப்பு பட்டயத்தில் குறித்து வைப்பார்கள். அதுவும் அரசு ஆவணங்களை பதிவு செய்யப்படும். தற்போது உள்ள ஆவணங்களை கூட முறைகேடாக மாற்றி விடலாம். ஆனால் செப்பு பட்டயங்களை மாற்ற முடியாது. குறிப்பிட்ட செப்பு பட்டயத்தின் அமைப்பு, அது தயாரிக்கப்பட்ட காலம், அது ஒத்து போகும் அரசு ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே செப்பு பட்டயத்தின் நம்பகத் தன்மை இருக்கும். அப்படித் தான் நாகப்பட்டினம் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த செப்பு பட்டயம் அவரது நிலத்தை மீட்டுக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post