நாடு முழுக்க உள்ள சம்பளதாரர்களுக்கு.. அடுத்த 15 நாட்கள் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா? நோட் பண்ணுங்க

post-img
சென்னை: விவாட் சே விஸ்வாஸ் திட்டத்திற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை ஜனவரி 15, 2025க்கு தள்ளி வைத்துள்ளது. ஆரம்பத்தில் டிசம்பர் 31, 2024 இல் முடிவடைய இருந்த காலக்கெடு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்த நீட்டிப்பு மூலம் வரி செலுத்துவோர் 10 சதவீத அபராதம் இல்லாமல் சிறு வரி முரண்பாடுகளை, வழக்குகளை தீர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்படும். பொதுவாக வரி கட்டுவதில் குறைபாடு இருந்தால் அதற்கு 10% அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் அந்த அபராதம் இல்லாமல் வரியை ஜனவரி 15ம் தேதிக்குள் கட்ட முடியும். ஆனால் சிறிய அளவிலான வரி முரண்பாடுகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். 2024 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விவாட் சே விஸ்வாஸ் திட்டமானது, வரி செலுத்துவோர் அது தொடர்பான குழப்பங்களை, முரண்பாடுகளை எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும். உதாரணமாக இப்போது நீங்கள் 10 ஆயிரம் வரியை குறைவாக கட்டி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதை நீங்கள் மேல்முறையீடு செய்ய முடியும். புதிய கணக்கை தாக்கல் செய்ய முடியும். அல்லது 10 ஆயிரம் வரியை கட்ட முடியும். இதற்கு 10% அபராதம்.. அதாவது ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும். ஆனால் இந்த விவாட் சே விஸ்வாஸ் திட்டத்தின் மூலம் அந்த அபராதம் இல்லாமல் மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீட்டில் நாம் கட்டிய கணக்கு சரி என்றால் கூடுதல் வரி கட்ட வேண்டியது இல்லை. அதுவே கணக்கு பிழையாக உள்ளது, கூடுதலாக 10 ஆயிரம் கட்ட வேண்டும் என்றால்.. 10% அபராதம் இல்லாமல் இந்த தொகையை கட்டலாம். அதுவே இந்த திட்டம். அதற்குத்தான் ஜனவரி 15ம் தேதி வரை அவகாசம். ஆனால் சிறிய அளவிலான வரி முரண்பாடுகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. ஜூலை 31க்கு பின் இது நீட்டிக்கப்படவில்லை. இந்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்பதை வரி செலுத்துவோம் அறிந்திருக்க வேண்டும். 2023-2024 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-2025) வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 ஆகும். தனிநபர்கள் ஜூலை 31 காலக்கெடுவைத் தவறவிட்டால், அவர்கள் டிசம்பர் 31, 2024க்குள் தாமதமாகத் தாக்கல் செய்யலாம். தாமதமாகத் தாக்கல் செய்வதால் சில பாதிப்புகள் இருந்தபோதிலும் பெரிய அளவில் தண்டனைகள் விதிக்கப்படாது. மாறாக.. வருமான வரியே தாக்கல் செய்யப்படாமல் போனால் கடுமையான அபராதங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அபராதம்: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் படி, தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் ரூ. 5000 வசூலிக்கப்படும். உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் ரூ.1,000 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வருமான வரியில் refundல் இழப்பு தொடங்கி பல விதமான இழப்புகளை சந்திக்கவும் நேரிடும். சிலர்க்கு வருமான வரி தாக்கல் செய்யாமல் போனால் சிறை தண்டனையும் கூட விதிக்கப்படலாம். அதேசமயம் உங்கள் வருமானம் முழுவதுமாக வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உங்களுக்கு வேறு வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லை என்றால், காலக்கெடுவிற்குப் பிறகு உங்கள் ITRஐ எந்த அபராதமும் இல்லாமல் தாக்கல் செய்யலாம். அதே சமயம் தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post