பாருவுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? அம்மா சொன்ன உண்மைகள்..?

post-img
சென்னை: வரும் புதிய ஆண்டின் சபதமாக விஜே பார்வதி 2025இல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சபதத்தை எடுத்திருக்கிறார். மேலும் அவர் வேறு என்ன திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்? 2024 ஆம் ஆண்டு விடைபெற இன்னும் நாளை ஒரு நாள்தான் இருக்கிறது. வரப் போகும் புதிய 2025 ஆம் ஆண்டில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? எதை தவிர்க்க வேண்டும்? எதை மறக்க வேண்டும் என பலர் இப்போதே பட்டியல் போடத் தொடங்கி இருப்பார்கள். அப்புறம் வழக்கமாக நியூ இயர் வரும்போது எல்லாம் சில சபதங்களை எடுப்பார்கள். ஆனால், அதை அடுத்த நாளே காற்றில் பறக்கவிட்டுவிடுவார்கள். அப்படிப் பல வருட அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். காலை 6 மணிக்கு அலாரம் வைக்காமல் டான் என்று எழ வேண்டும் என்பது கோடிக்கணக்கான சோம்பேறிகளின் கனவாக இருக்கிறது. இளம் தலைமுறையினர் இரவு சரியான நேரத்திற்குப் படுக்கைக்குப் போவதே இல்லை. இரவு ஒருமணிக்கு ஆன்லைனில் ஆடர் போடுபவர்கள் இருக்கிறார்கள். அதை எல்லாம் குறைக்க வேண்டும் என சத்தியம் செய்து இருப்பார்கள். அது நடக்குமா? நடக்காதா? என்பது 1 ஆம் தேதிக்குப் பின்னர்தான் தெரியும். இப்படி 2025 என்ன செய்ய வேண்டும்? என தனியாக ஒரு பட்டியலை அம்மாவுடன் சேர்ந்து வாயாடி விஜே பாரு தயார் செய்திருக்கிறார். அவரது அம்மாவுடன் இணைந்து அவர் இப்போது வீடியோ போட ஆரம்பித்திருக்கிறார். அதில் அவரது அம்மா சில கட்டளைகளை தனது மகள் பாரிக்குக் கொடுத்துள்ளார். பாரு விஜேவாக இருந்து கலக்கி வருவதைப் போலவே அவரது தாயார் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என பல பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டு அதைப் பற்றிய கூட்டங்களில் பேசியும் வருகிறார். அம்மாவுக்கு தமிழ்ப் பற்று அதிகம். ஆனால் இந்த மகளுக்கு ஆங்கிலம்தான் உலகம். வரும் புதிய ஆண்டில் என்ன செய்ய வேண்டும் என்ற பாருவின் பட்டியலில் முதல் இடம்பிடித்துள்ளது என்ன தெரியுமா? கல்யாணம்தான். பாருக்கு இன்னும் ஒன்றரை வருடத்தில் 30 வயதாகப் போகிறதாம். ஆகவே சட்டுபுட்டு என்று கல்யாணம் பண்ண வேண்டும் என்பது தாயாரின் அறிவுரையாக இருக்கிறது. பாரு வெளியிட்டுள்ள வீடியோவில் அவரை அரை கிழவி என்று அவரது அம்மா கலாய்க்கிறார். அதற்கு, 'அரை கிழவி என்று என்னை ஒரு முழுக் கிழவி சொல்கிறது’ என்று பதிலுக்குக் கலாய்க்கிறார் பாரு. பாருவின் திருமணம் பற்றி அவரது அம்மா பேசுகையில், “முதலில் உனக்கு கல்யாணம் பண்ண வேண்டும். அதான் முதல் வேலை. உன் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளையைக் கூட நீயே பார்த்துக்கொள். அப்படி யாரையாவது முன்பே பார்த்து வைத்திருந்தால் முதலில் அதைச் சொல்லிவிடு. அந்த நாளுக்காகத்தான் நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்” என்று அவர் அனுமதி கொடுத்திருக்கிறார். அடுத்ததாக சில கட்டளைகளை அவர் மகளுக்குப் போட்டுள்ளார். சனிக்கிழமை வந்தால் பார்ட்டி போவதை நிறுத்த வேண்டுமாம். உடனடியாக தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம். இரவு இரண்டு மணிக்கு சினிமா பார்ப்பதை நிறுத்த வேண்டுமாம். இதை எல்லாம் செய்ய பாருவும் சபதம் செய்திருக்கிறார். சத்தியம் வெல்கிறதா? இல்லை, வழக்கம் போல் காற்றோடு கரையப் போகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் அவரது அம்மா பார்க்க வேண்டும். தாய் சில கட்டளைகளைப் போட்டதைப் போல், பாருவும் அவர் அம்மாவுக்கு சில அறிவுரைகளைச் சொல்லி இருக்கிறார். அதில் முக்கியமானது அவர் இந்த வயதான ஆட்களுடன் உட்கார்ந்து கம்பராமாயணம், சிலப்பதிகாரம், புறநானூறு எனக் கூட்டங்கள் பேசுவதைத் தவிர்த்துவிட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம். அதற்கு அவரது அம்மாவும் சம்மதம் சொல்லி இருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post