மனை, கட்டிட அனுமதி.. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் ஒற்றை சாளர முறையில் கட்டணம் தேவை: பெயிரா கோரிக்கை

post-img
சென்னை: தமிழக கிராம ஊராட்சிகளில் மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி வழங்குவதற்கு ஒருங்கிணைந்த கட்டணத்தை நிர்ணயித்து, அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசுக்கும், ஊரக வளர்ச்சி துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளது பெயிரா. அத்துடன் முக்கிய கோரிக்கை ஒன்றையும் தமிழக அரசுக்கு விடுத்துள்ளது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி பாராட்டி எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குனர் அவர்களால் தமிழக அளவில் உள்ள கிராமங்களை வகைப்படுத்தி, அனுமதி வழங்குவதற்கான ஒருங்கிணைந்த கட்டணத்தை அரசாணை எண்: 133/2024 இன் மூலம் அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிட திட்ட அனுமதி மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கிட தற்போது நடைமுறையில் உள்ள பல வகையான கட்டணங்களை ஒருங்கிணைத்து, ஒரே தலைப்பின் கீழ் ஒருங்கிணைந்த கட்டணமாக நிர்ணயித்து, அதனையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தி, ஒற்றை சாளர முறையில் அனுமதி பெறும் வகையில், தமிழகத்தில் உள்ள கிராமங்களை அதன் வளர்ச்சியின் அடிப்படையில், A,B,C,&,D என வகைப்படுத்தி கட்டடத் திட்ட அனுமதி மற்றும் மனை பிரிவுகளுக்கான அனுமதி வழங்குவதற்கு உண்டான ஒருங்கிணைந்த கட்டணத்தை நிர்ணயம் செய்து, அரசாணை எண். 180/2024 ஆக வெளியிட்டு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழகத்தில் உள்ள கிராம ஊரக உள்ளாட்சிகளில் கட்டப்படும் 2,500 சதுரடி மனையில் 3500 சதுரடி வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுயசான்றின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கும் வகையிலும், 2500 சதுரடிக்கு மேற்பட்ட நிலப்பரப்பளவில் 3500 சதுரடிக்கு மேலும் கட்டப்படும் கட்டிடங்களுக்கும் ஒருங்கிணைந்த கட்டணங்களை நிர்ணயித்து நடைமுறைப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களை A,B,C,D என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட்: இவை ஒன்றிற்கும் நகர்ப்புற கிராமங்கள், வணிக கட்டிடங்கள், தொழில்துறை சார்ந்த கட்டிடங்கள், மருத்துவமனைகள், கல்விக் கட்டிடங்கள் உட்பட நிறுவனக் கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்கள் உட்பட மற்ற அனைத்து கட்டிடங்களுக்குமான விலை மற்றும் அனுமதி கட்டணம் தொழில்துறை மனை பிரிவிற்கு கட்டணம், என தனித்தனியாக நிர்ணயித்து நடைமுறைப்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் மற்றும் ஊரகவளர்ச்சித் துறைக்கும், உளம் நிறைந்த பாராட்டுக்களையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர், மேற்கண்ட ஊரக உள்ளாட்சித் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் கிராம ஊராட்சிகளில் அபிவிருத்தி செய்யப்படும் மனைப் பிரிவு மற்றும் கட்டிட திட்ட அனுமதிகளுக்கு நடைமுறைகளில் இருந்து வந்த பல வகையான கட்டணங்களை ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக ஒரே தலைப்பின் கீழ் செலுத்துவதற்கு வழிவகை செய்தது போன்று, நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் (மாநகராட்சி - நகராட்சி - பேரூராட்சி) நகரங்களை மேற்கண்ட வகையில் வகைப்படுத்தி, அதனையும் ஒற்றைச் சாளர முறையிலேயே இணையதளம் வாயிலாகவே (ஆன்லைன் மூலம்) கட்டணத்தை செலுத்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். வேண்டுகோள்: அதேபோன்று இறுதி அனுமதியையும், ஒற்றைச்சாளர முறையில் உள்ளாட்சிகளிடமிருந்து இணையதளம் வாயிலாகவே (ஆன்லைன் மூலம்) பெறும் வகையிலும் வழிவகை செய்ய வேண்டும்" என்ற வேண்டுகோள் விடுத்து டாக்டர் ஹென்றி கடிதம் எழுதி உள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post