பேச மட்டும்தான் முத்துகுமரன் லாயக்கா? பெற்றோர் கொடுத்த பதிலடி? கண்கலங்கிய தாய்

post-img
சிவகங்கை: தங்களது மகன் முத்துக்குமரன் பேச மட்டும்தான் லாயக்கு என்று சிலர் குத்திக் காட்டிப் பேசுவது பற்றி அவரது பெற்றோர் மனம் வருந்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. மேடைப் பேச்சாளராக இருந்து இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாக மாறி இருக்கிறார் முத்துக்குமரன். சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தில் பிறந்தவர் இவர். முத்துக்குமரன் அவரது பெற்றோருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர். ஊரிலிருந்தவர்கள் 'நீ பேசதான்டா லாயக்கு' என்று சொன்னதையே தொழிலாக்கிக் கொண்ட இவருக்கு சமூக ஊடகங்களில் ஆதரவாகப் பலர் உள்ளனர். அதே அளவுக்கு நசநச என்று பேசிக்கிட்டே இருக்கான் என்று எரிச்சல் அடைபவர்களும் இருக்கின்றனர். ஊடகத்துறைக்குள் உள்ளே வந்த இவர் பலபடி நிலைகளில் உள்ள வேலைகளைக் கற்று பின் தொகுப்பாளராக மாறினார். இன்ஸ்டாகிராம் மூலமும் பேச்சு போட்டிகள் மூலமும் மக்களிடம் போய் சேர்ந்த முத்துவுக்கு பிக் பாஸ் அளவுக்கு ஒரு இடம் கிடைத்ததை அவரது பெற்றோர் வியந்து பார்க்கின்றனர். சாதாரண நிலையில் ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் வசிக்கும் அவர்களுக்கு இந்த வாழ்க்கை விமானத்தை அண்ணாந்து பார்ப்பதைப் போல வியப்பாக இருக்கிறது. ஊரில் உள்ளவர்கள் தன் மகனைப் பிரபலம் எனப் பார்க்கும் போது அதை நினைத்து உற்சாகம் கொள்கிறார்கள் இவர்கள். அச்சு அசலாக முத்துக்குமரனை போல அப்படியே இருக்கிறார் அவரது அம்மா. பேச்சும் முகச் சாயலும் கூட தாயின் தோற்றத்தை முத்து பிரதிபலிப்பதைப் பார்க்க முடிகிறது. முத்துக்குப் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொடுத்தவர் இவர்தான். ஊடகத்துறைக்கு வந்த பிறகு அப்பாவுக்கு மோதிரம் அம்மாவுக்குப் பல பரிசுகள் என வாங்கிக் கொடுத்ததாக இந்தப் பெற்றோர் மனம் மகிழ மகனை வாழ்த்துகிறார்கள். "என் மகனுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் கடும் போட்டி இருக்கிறது, அவனை வெற்றி பெற விட்டுவிடக்கூடாது என சகப் போட்டியாளர்கள் நினைப்பது சகஜம்தான். ஆனால், அதை மீறி என் மகன் வெற்றி பெறுவான்" என்கிறார் முத்துவின் அப்பா. வளவளவென்றும் முத்துக்குமரன் காது புளிக்கும் அளவுக்குப் பேசுவதுகூட ஒரு விமர்சனமாக பிக்பாஸ் வீட்டில் முன்வைக்கப்பட்டது. அதைப் பற்றி அவரது அம்மா, "வாய் மட்டுமே வைத்து இருக்கிறான் என மட்டம் தட்டப் பார்ப்பது தவறுதான். அவனுக்குப் பேச்சுத் திறமை இருக்கிறது. அதை வைத்துத்தான் அவன் முன்னேறி இருக்கின்றான். அவனை விடப் பேசி ஜெயித்து காட்டவேண்டும். அதைவிட்டு அவனை மட்டம் தட்டக் கூடாது" என்கிறார் அவர் தாய். "என் மகனைப் பேச மட்டும்தான் லாயக்கு என சிலர் சொல்வது கேட்கும்போது மனம் வலிக்கிறது. அது தவறுதான். பலருக்குப் பல திறமை இருக்கும். இவனுக்குப் பேசும் திறமை இருக்கிறது என எடுத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் முத்துவின் தந்தை. இவர்கள் இருவரும் சமீபத்தில் தன் மகனை பிக்பாஸ் வீட்டுக்குள் போய் சந்தித்துவிட்டு வந்தனர். தனது 51 ஆவது வயதில் விஜய் சேதுபதியுடன் நின்று பேசியது என்பது வாழ்நாளில் நடந்த அதிசயம்தான் என்கிறார் இந்தத் தாய். தனது 26 வயது வரை தாயின் மடியில் உறங்கியதே இல்லை என்று முத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதை பிக்பாஸ் நிறைவேற்றியது. சிறுவயது முதலே எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தைப் பற்றி ஜெயம் ரவிபோல் வரவேண்டும் என தான் சொன்னதாகவும் தன் மகன் இன்று அந்த அளவுக்கு வந்துவிட்டான். ஆனால், என்னால்தான் நதியா போன்று வரமுடியவில்லை என்று கண்கலங்கி இருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post