இதயநோயால் உயிருக்கு போராடும் 2.8 வயது குழந்தை யுவதாரணியை காப்பாற்ற உதவுங்கள்

post-img
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 2 வயது 8 மாத குழந்தையான யுவதாரணி கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படவில்லையெனில் குழந்தையின் உயிரை காப்பாற்றுவது கஷ்டம். எனவே யுவதாரணியின் உயிரை காப்பாற்ற முடிந்த உதவியை இன்றே செய்யுங்கள். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. அவருக்கு சமீபத்தில் பெண்குழந்தை பிறந்தது. கேட்ரிங் வேலையில் தினக்கூலியாக உள்ள வேல்முருகனுக்கு மாதத்தில் எல்லா நாளும் போதுமான வருமானம் கிடைத்துவிடாது. வேலை கிடைக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு ரூ.400 என சம்பளம் கிடைக்கும். வேலையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் குழந்தை யுவதாரணியின் புன்சிரிப்பில் எல்லா கஷ்டங்களும் மறந்துவிடும். ஆனால் சில நாட்களாக குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. இரண்டரை வயதில் குழந்தைகள் எந்த அளவுக்கு ஆக்டிவாக இருப்பார்களோ, அந்த அளவுக்கு யுவதாரணி இல்லை. எனவே, ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. பார்க்காத வைத்தியம் கிடையாது, கும்பிடாத சாமி கிடையாது. ஆனாலும் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் தந்தை வேல்முருகன், மியாட் மருத்தவமனையில் குழந்தை யுவதாரணியை பரிசோதித்தார். இதில், குழந்தைக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் இதனை Pulmonary atresia என்று கூறுகிறார்கள். உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். அறுவை சிகிச்சை மற்றும் மருந்து என எல்லாவற்றிற்கும் சேர்த்து ரூ.3.25 லட்சம் செலவாகும். சாதாரண கூலி தொழிலாளியால் இவ்வளவு பெரிய தொகையை உடனே ஏற்பாடு செய்ய முடியாது. எனவே, குழந்தை யுவதாரணியை காப்பாற்ற உடனே உதவுங்கள். உங்களால் முடிந்த சிறு உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post