உலக நாடுகளே மிரள போகும் புதிய தொழில் நுட்பம்.. இஸ்ரோ வெளியிட்ட மெய்சிலிர்க்க வைத்த வீடியோ

post-img
சென்னை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'பி.எஸ்.எல்.வி. சி-60' ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை' என்ற பணிக்காக இஸ்ரோ 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இதன் மூலம், விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை குறித்து படைத்துள்ளது. விண்ணில் ஏவப்படும் காட்சிகள் அடங்கிய மெய்சிலிர்க்க வைக்கும் புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் கனவுத் திட்டமாக பார்க்கப்படும் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்த போகிறது. அதாவது 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை' என்ற பணியினை இஸ்ரோ மேற்கொள்ள போகிறது. இதற்காக 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை பிரத்யேகமாக வடிவமைத்திருந்தது. இது ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இந்த செயற்கைகோள்களை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதையில் செலுத்தி, விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களையும் இணைய வைக்கும் மிகப்பெரிய சவாலான பரிசோதனையை நிகழ்த்த போகிறது. இதற்காக தமிழ்நாட்டை எல்லையான பழவேற்காட்டை ஏரியை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இறுதிக்கட்டப்பணிகள் நடந்து வந்தது. இறுதியசோதனை சோதனைக்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று இரவு முடிந்த நிலையில், இரவு 10 மணி 15 வினாடிக்கு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தப்படி விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பாகங்கள் அடுத்தடுத்து பிரிந்து சென்றது. ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதையில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததால், விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் கைகுலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 62-வது ராக்கெட், 'கோர் அலோன்' என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 18-வது ராக்கெட் ஆகும். எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும், விண்வெளி ஆய்வு மையம் அமைப்பதற்கான முக்கிய தொழில்நுட்பம் தான் விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களையும் இணைய வைக்கும் மிகப்பெரிய சவாலான பரிசோதனையாகும். இதன்படி விண்ணில் ஏவப்பட்ட சேசர், டார்கெட் என்ற 2 செயற்கைக்கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 470 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியின் குறைந்த சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. 2 செயற்கை கோள்களும் அதிவேகமாக பூமியைச் சுற்றிய பின்னர் இரண்டும் இணைய வேண்டும். இந்த பணிகள் வெற்றி பெற்றால் விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனையே படைக்கும்.. உலக நாடுகளே நிச்சயம் வியந்து போகும். இந்நிலையில் 'பி.எஸ்.எல்.வி. சி-60' ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தொடர்பான புதிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post