அந்த சார் யார்.. ஊருக்கே தெரியும்? சொல்லட்டுமா? நிர்மலா பெரியசாமி ரிட்டர்ன்ஸ்

post-img
சென்னை: கடந்த சில வருடங்களாக அரசியல் களத்தில் வெளியே தெரியாமல் இருந்து வந்த நிர்மலா பெரியசாமி, அண்ணா பல்கலைக் கழக பெண் பாலியல் விவகாரத்தை தீவிரமாகக் கையில் எடுத்துப் பேசி வருகிறார். அண்ணா பல்கலைக் கழக பெண் பாலியல் பலாத்காரம் பற்றிய சர்ச்சையை ஒரு அரசியல் ஆயுதமாக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. விஜய் ஆளுநர்வரை சென்று புகார் அளித்துள்ளார். அதிமுக சார்பில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற்றது. அதில் நிர்மலா பெரியசாமி கலந்து கொண்டு ஆவேசமாகப் பேசினார். 2003 அதிமுகவில் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே இணைந்தார். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு பின் ஓபிஎஸ் அணிக்குப் போனார். பல காலமாக அவர் அரசியல் களத்தில் இருக்கிறாரா? எனச் சந்தேகம் இருந்தது. திடீரென்று அவர் மீண்டும் ஆவேசமாகப் போராட்டக் களத்திற்கு திரும்பி இருக்கிறார். அண்ணா பல்கலைக் கழகத்தை அதிமுக நிர்வாகிகள் முற்றுகையிட முயன்றபோது கடுமையாக காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை ரகசியம் காக்க வேண்டிய காவல்துறை அதைக் கசியவிட்டு, அதனை 14 பேர் நகல் எடுத்துள்ளனர். இந்தளவுக்குத்தான் சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் இருக்கிறது என்று கண்டித்துள்ளார். ஆனால், இதைப் போன்ற பாலியல் சம்பவங்கள் அதிமுக ஆட்சியிலும் நடந்துள்ளது. பொள்ளாச்சியில் நடக்கவில்லையா? 2019க்குப் பிறகு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீது வழக்குப் பதியப்படவே இல்லை என திமுக தரப்பு விளக்கம் அளித்து வருகிறது. இந்நிலையில் நிர்மலா பெரியசாமி பல ஊட்டங்களைச் சந்தித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு வருகிறார். நிர்மலா பெரியசாமி அளித்துள்ள ஒரு பேட்டியில், "இந்த திமுக ஆட்சியில் பல பாலியல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. பல சம்பவங்களை என்னால் சொல்ல முடியும். ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு இடத்தில் உடை மாற்றும் அறையில் 200 பெண்களை வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள். மாயவரத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஒரு பெண்ணை கொலை செய்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக் கழகம் முதல் சம்பவம் இல்லை. இப்போது பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் 23 ஆம் தேதி நடந்துள்ளது. அதற்கு முன் 21 ஆம் தேதி அவரது தோழி ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதில் கைசெய்யப்பட்ட ஞானசேகரன் சரித்திர பதிவேடு குற்றவாளி. 20 வழக்குகள் அவர் மீதுள்ளது. எனவே இது முதல்முறை அல்ல என்பது உறுதி. இந்த ஞானசேகரன் பின்னர் இருப்பவர் யார்? அவர், 'எங்க சார் கூடவும் இருக்கவேண்டும்' எனச் சொன்னதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த சார் யார்? அவரை ஊருக்கே தெரிந்து இருக்கிறது. காவல்துறைக்கு மட்டும் தெரியவில்லையா? அந்தப் பகுதியில் உள்ள அமைச்சர் இந்தச் சம்பவம் பற்றி இதுவரை வாய் திறக்கவே இல்லை, அமைதியாக இருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post