புஷ்பா 2 : அல்லு அர்ஜுனின் சிகப்பு நிற நகத்திற்கு பின் இருக்கும் சிலிர்க்க வைக்கும் காரணம்..!

post-img
புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் வலது கையில் உள்ள சுட்டு விரலில் நகம் நீளமாகவும் சிகப்பு நிறத்திலும் இருப்பதை கவனித்திருக்கலாம். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..? என்று தெரிந்து கொண்டால் படத்தின் இயக்குனர் சுகுமார் எந்த அளவுக்கு கதைக்களத்தை அறிந்து படத்தை எடுத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். புஷ்பா கதை நடப்பதாக சொல்லப்படும் இடத்தில் உள்ள மக்களின் கலாச்சாரம் இந்த சுட்டு விரலில் நீளமான சிகப்பு நிற நகத்தை வளர்த்துக் கொள்வது. இதற்கு என்ன காரணம் என்றால்..? யார் ஒருவர் சுட்டு விரலில் நீளமான நிறத்தை வைத்திருக்கிறாரோ.. அவர் பெரிய வசதி படைத்தவர்.. உடல் உழைப்பு செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர் என்று அர்த்தமாம். அந்த ஊரின் இந்த வினோதமான நடைமுறையை தெரிந்து கொண்ட இயக்குனர் சுகுமார் புஷ்பா 2 படத்தில் மிகப்பெரிய வசதி படைத்தவராக சிண்டிகேட்டின் தலைவர் இருக்கும் அல்லு அர்ஜுன் உடல் உழைப்பு இல்லாதவர் என்ற முறையில் அவருக்கு பெரிய நீளமான நகத்தை படம் முழுக்க கொடுத்திருக்கிறார். ஒருவேளை மீண்டும் புஷ்பா உடல் உழைப்பை நம்பி இருக்கக்கூடிய ஒரு நபர் திரைக்கதை நகரும் போது புஷ்பாவின் நீளமான சிகப்பு நகம் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தில், புஷ்பா இத்தனை நாட்களாக சேர்த்து வைத்த அனைத்து சொத்துக்களையும் இழந்து விடுவார். அதற்கு யார் காரணம் என்று தெரிந்து உடைந்து போகும் புஷ்பா அதிலிருந்து மீண்டாரா..? இல்லையா..? என்பது தான் படத்தின் ஒன் லைன் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே எகிறி இருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post