உங்க தாத்தா தான் அப்படி.. உங்க அப்பன் அப்படி இல்ல.. மகன்களிடம் தனுஷ் இப்படி சொல்லியிருக்காரா..?

post-img
பிரபல நடிகர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா ராஜா, லிங்கா ராஜா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தன்னுடைய மனைவியை பிரிவதாக நடிகர் தனுஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். முறைப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்து விவாகரத்தும் பெற்று விட்டனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளைப் பெற்றார் தனுஷ். அப்போதுதான் முதன் முதலில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை சந்தித்தார் நடிகர் தனுஷ். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் ஒரு கட்டத்தில் நட்பாக மாறி காதலாக உருவெடுத்து அந்த காதலுக்கு ரஜினி தரப்பில் இருந்து சம்மதம் கிடைக்காமல் தன்னுடைய மகளின் பிடிவாதத்தால் ரஜினியும் மனைவியும் ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டு இருவருடைய திருமணமும் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இரண்டு பேரும் திருமணத்திற்கு பிறகு உச்சகட்ட காதலுடன் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய காதலின் அடையாளமாக யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் பிறந்தனர். மட்டுமில்லாமல் ஐஸ்வர்யாவுக்குள் இருக்கக்கூடிய இயக்குனராக வேண்டும் என்ற ஆசையை புரிந்து கொண்ட நடிகர் தனுஷ் அவர் இயக்கிய முதல் படமான மூன்று படத்தில் தானே ஹீரோவாக நடித்துக் கொடுத்தார். அடுத்ததாக இயக்கிய வை ராஜா வை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துக் கொடுத்தார். பல வருடங்களுக்கு ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். நீதிமன்றத்தில் முறையாக விவாகரத்தும் பெற்று விட்டனர். இந்நிலையில் நடிகர் தனுஷ் கொடுத்திருக்கும் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. யாரடி நீ மோகினி வெளியான சமயத்தில் நடிகை நயன்தாராவுடன் பல்வேறு தனியார் ஊடகங்களில் பேட்டி அளித்திருக்கிறார். தனுஷ் அப்போது ஒரு பேட்டியில் பேசிய அவர் என்னுடைய மகன் காஸ்ட்லி பொருட்களை மட்டும் தான் உடைப்பார். அதில் மட்டும் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். விலை குறைந்த பொருட்களை எல்லாம் அவர் தொட்டுக் கூட பார்க்க மாட்டார். நான் அவரிடம் கூறினேன்.. டேய் உங்க தாத்தா தான் சூப்பர் ஸ்டார்.. உங்க அப்பா இல்லை.. என்று கூறினேன். ஆனால், அவர் அதை கேட்பதாக இல்லை.. என்னுடைய அம்மாவிடம் சென்று சொன்னால்.. அவரோ, நீயும் சின்ன வயசில் இப்படித்தான் இருந்த.. அதையே தான் உன் மகனும் செய்கிறான் என்று சொல்லி என் வாயை அடைத்து விடுவார் என பேசி இருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post