எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிசம்பர் 30 - 31 ல் இண்டர்வியூ.. சென்னையில் நியமனம்

post-img
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து டிசம்பர் 30-31 ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த இண்டர்வியூவில் யாரெல்லாம் பங்கேற்கலாம்? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனம் தான் எச்சிஎல். தமிழகத்தில் இந்த நிறுவனம் சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரங்கள் வருமாறு: எச்சிஎல் நிறுவனம் சார்பில் Reconciliation Specialist பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Account Reconciliation of receivable/payables, Reconcile Corporate, Treasury and Bank Accounts, தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஆடிட், பேலன்ஸ் மற்றும் ரீகன்சில் டெய்லி கேஷ் போஸ்டிங்ஸ், கிரெடிட் கார்டு செட்டிமென்ட்ஸ், டெப்பாசிட் செக் செய்வது உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக பிரிட்டன் ரோட்டேஷனல் ஷிப்ட் தான் இருக்கும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies Ltd. ETA 1- Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village and Panchayat, Thiruporur Panchayat Union, Navallur, Tamil Nadu 603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவில் பங்கேற்போர் அப்டேட்டட் ரெஸ்யூம், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு ஐடி கார்டு உள்ளிட்டவற்றை இண்டர்வியூவுக்கு எடுத்து செல்ல வேண்டும். பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post