சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் QA Intern - Automation பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2024ம் ஆண்டில் படிப்பை முடித்து அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அவர்களுக்கு தொடக்கத்திலேயே நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் Lumel Technologies Ltd என்ற நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி லுமெல் நிறுவனத்தில் QA Intern - Automation பணிக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு பிஇ பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் படிப்பை 2024ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் logical thinker, Very Curious Mind ஆக இருக்க வேண்டும்.
அதேபோல் டெஸ்ட்டிங் புரோடக்ட்டில் பேஷனேட்டாக இருக்க வேண்டும். அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு முறையாக அலுவலகத்தின் வழியாக மட்டுமே ஆட்சேர்ப்பு என்பது நடக்கும். வெளிநபர்கள் யாரும் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இதனால் விண்ணப்பத்தாரர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள Lumel Technologies நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Lumel Technologies நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பம் செய்ய கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here