20 நாப்கின் மாத்தியும் நிக்கல.. பீரியட்ஸ் நேரம்.. பிரபல நடிகையின் தம்பி செய்த செயல்.. மைனா நந்தினி வேதனை..!

post-img
நடிகை மைனா நந்தினி சமீபத்திய பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு நேர்ந்த கொடுமையான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். மைனா நந்தினி தமிழில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜன் மூலம் வம்சம் என்ற படத்தில் மீண்டும் நடித்தார் இதனை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா. வெள்ளைக்காரத்துரை. ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியல்தான் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து சீரியல்களில் கலக்கிக் கொண்டிருந்த இவர், அமுதா ஒரு ஆச்சரிய குறி, பாண்டியன் ஸ்டோர்ஸ், அரண்மனை கிளி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தன்னுடைய ஆரம்ப காலத்தில் டஸ்க்கி செக்ஸியாக இருந்த இவர் ஒரு கட்டத்தில் வெள்ளை வெளேரென்று மாறி கிளாமர் குதிரையாக தன்னை மாற்றிக்கொண்டார். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியில் தனக்கு நடந்த கொடுமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இதனால் தான் இந்த நிலை ஏற்பட்டது எனவும் தன்னை பற்றி பரவி வந்த மோசமான விமர்சனங்களுக்கு பதிலை கொடுத்து ஒரு தெளிவை கொடுத்திருக்கிறார். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போது இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதற்கான சரியான பதிலாக இந்த பேட்டியை கொடுத்திருக்கிறார் நடிகை மைனா நந்தினி. பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி மணிகண்டன் என்பவரும் அவர் பங்கேற்ற அதே சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இவர் மைனா நந்தினிக்கு உதவுவதாகவும் போட்டி என்று வரும்போது யாரும் யாருக்கும் உதவி செய்யக்கூடாது என்பதை மீறி நந்தினிக்கு தனிப்பட்ட முறையில் இவர் உதவிக்காக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஏன் மணிகண்டன் எனக்கு உதவினார்..? என்று மைனா நந்தினி இந்த பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் எனக்காக எதற்கு உதவி செய்தார்..? என்பது பலருக்கும் தெரியாது. அந்த சமயத்தில் பீரியட்ஸ் ஏற்பட்டிருந்த காரணத்தால் கடுமையான உதிரப்போக்கின் காரணமாக சிரமப்பட்டு வந்தேன். 20 நாக்கின்களுக்கு மேல் மாற்றிவிட்டேன். ஆனாலும், உதிரப்போக்கு நிற்கவில்லை. அந்த சமயத்தில் தான் எனது நிலையை உணர்ந்து கொண்டு அவர் எனக்கு உதவி செய்தாரே.. தவிர மற்றபடி அடுத்தவர்களை தோற்கடிக்க வேண்டும் என இருவரும் சேர்ந்து சதி செய்தோம் என்று எண்ணுவதெல்லாம் மிகவும் தவறு. அதில் உண்மை கிடையாது. இதை சொல்ல எனக்கு கூச்சம் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post