கல்லீரல் காவலன்.. "இந்த பொடி" போதும்.. உடல் எடை மின்னல் வேகத்தில் குறையுமாம்..

post-img

நம்முடைய முன்னோர்கள், தங்கள் வீடுகளில் கட்டாயம் வைத்திருந்த மூலிகை பொடிதான் திரிபலா.

நெல்லிக்காய் + கடுக்காய் + தான்றிக்காய் இது மூன்றும் சேர்ந்த பொடிதான் திரிபலா.. எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் பொடியாகும்.

நெல்லிக்காய்:

சிலர் இதை வீட்டிலேயே தயார் செய்வார்கள்.. கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் 4 பங்கு, தான்றிக்காய் 2 பங்கு எடுத்து, நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து கொண்டால், திரிபலா பொடி தயார். பெரும்பாலும் இரவில்தான் இந்த பொடியை 5 கிராம் அளவுடன் சாப்பிடுவார்கள். இதனால் ஏற்படும் நன்மைகளை லிஸ்ட் போட்டு சொல்லிவிட முடியாது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதிலுள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி முதுமையை தள்ளி போடுகிறது இந்த பொடி.. குடலை சுத்தம் செய்கிறது.. நன்றாக செரிமானம் நடக்கிறது.. மலச்சிக்கலை தீர்க்கிறது. வயிற்றில் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது.. இதனால் வயிற்றுப்புண்ணும் ஆறுகிறது.. அல்சரையும் தடுத்து நிறுத்துகிறது.

இதய சுத்திகரிப்பு:

இதயத்தை காக்கிறது.. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்து, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.. இதனால் அனிமிக் பிரச்சனையையும் தீர்க்கிறது. இந்த பொடியை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பார்கள்.

அதாவது ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தை சேர்த்து மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை, 2 டம்ளர் நீரை, ஒரு டம்பர் வரும்வரை சுண்டகாய்ச்சி, தேன் கலந்து குடித்தால் பலன் தரும். இதனால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.. தேவையற்ற சதைகளும் கரைய தொடங்கும். தேவையற்ற கிருமிகளும் அழியும்.

சர்க்கரை:

சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதில் திரிபலா பெரும்பங்கு வகிக்கிறது. திரிபலாவிலுள்ள கசப்பு தன்மையானது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை இந்த பொடி குறைக்கிறது.. கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. எனவே, மருத்துவர் அனுமதியுடன் இந்த பொடியை பயன்படுத்தலாம். மழைக்காலங்களில் சுடுநீரிலும், குளிர் காலங்களில் நெய்யுடனும், பனிக்காலங்களில் தேனுடனும், கோடை காலத்தில் நீருடன் கலந்து இந்த பொடியை சாப்பிட வேண்டும்.

சூரணம்:

இந்த சூரணத்துடன், கிராம்பு + கல் உப்பு சேர்த்து பல்பொடியாக உபயோகித்தால், ஈரல் வலுப்படும்.. வாய் துர்நாற்றம் நீங்கும்.. மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு இருந்தால், பெண்கள் இந்த பொடியை பயன்படுத்தலாம். ஆனால், கர்ப்பிணிகள் டாக்டரின் அறிவுரை இல்லாமல் இதை சாப்பிடக்கூடாது.


Related Post