கொத்து கொத்தா முடி கொட்டுவதற்கான காரணங்கள் எப்படி தடுக்கலாம்...

post-img

தலையில் இருந்து முடி கொத்து கொத்தாக கொட்டி வட்ட வடிவில் திட்டுகள் உருவாக ஆரம்பித்து விடும்.

Hair Loss Causes, Symptoms, Treatment and Prevention in Tamil

முடி உதிர்தல் அளவு பெரியவர்களை பொறுத்த வரையில் தலையில் உள்ள 10 லட்சம் - 15 லட்சம் முடிகளில் ஒரு நாளைக்கு 80 - 100 முடிகள் வரை இழக்கிறார்கள். இந்த அளவு இயல்பானது தான். இதற்கும் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும் போது தான் நாம் மருத்துவரை காண வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 5% பேர்கள் அலோபீசியாவால் பாதிப்படைகின்றனர். இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முடி உதிர்ந்த உடன் வளரத் தொடங்கி விடும். நோய்கள், மருந்துகள், மரபணுக்கள் போன்றவை கூட முடி உதிர்தல் பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றன.

காரணங்கள் ஒவ்வொரு நாளும் நாம் சாதாரணமாக சீப்பைக் கொண்டு இழுக்கும் போதே முடி உதிர்தல் ஏற்படுகிறது. 100 முடிகள் ஒரு நாளைக்கு விழுந்தால் கூட அதை நாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. காரணம் அவை மீண்டும் வளர்ந்து விடுகிறது. முடி உதிர்தலும் வளர்ச்சியும் சமநிலையில் இருந்தால் பிரச்சனை ஏற்படாது. ஆனால் முடி உதிர்தல் அதிகமானால் பிரச்சனை தான். அப்படி முடி உதிர்தலுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகள் தான் காரணமாக அமைகின்றன.

பரம்பரை - முடி உதிர்தல் மற்றும் வழுக்கை போன்றவை பரம்பரையால் ஏற்படலாம். மிகவும் ஆபத்தான நோயான மூளை பக்கவாதம் இளைஞர்களிடையே ஏன் அதிகரிக்கிறது தெரியுமா? ஹார்மோன் மாற்றம் கருவுறும் போது, மாதவிடாய் காலத்தில் மற்றும் பிரசவத்தின் போது, தைராய்டு பிரச்சனை ஏற்படும் போது உண்டாகும் ஹார்மோன் மாற்றத்தால் முடி உதிர்தல் ஏற்படுகிறது.

மருந்துகள் மன அழுத்த மருந்துகள், கீழ்வாத மருந்துகள், ஆர்த்ரிட்ஸ் மற்றும் உயர் இரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. கீமோதெரபி மருந்துகள் கேன்சரை குணப்படுத்த கீமோதெரபி மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது முடி உதிர்தல் ஏற்படுகிறது. ஹேர் கலரிங் மற்றும் ஹேர் ஸ்டைல் இறுக்கமான ஹேர் ஸ்டைல் மற்றும் கெமிக்கல்கள் கலந்த ஹேர் கலரிங் பொருட்களை பயன்படுத்தும் போது முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. தலை அழற்சி தலையில் ஏற்படும் பூஞ்சை தொற்று, பட்டர் தாமரை போன்ற அலற்சியால் கூந்தல் உதிர்வு ஏற்படும்.

தவறான உணவுப் பழக்கம் புரோட்டீன் மற்றும் விட்டமின் பி நிறைந்த உணவுகள் சாப்பிடாமல் பற்றாக்குறை ஏற்படும் போது கூந்தல் உதிர்வு ஏற்படும். முடி உதிர்தலின் வகைகள் அலோபீசியா டோட்டலிஸ்: -இது ஒரு ஆட்டோ இம்பினியூ நோய். இதனால் கூந்தல் உதிர்தல் ஏற்படும்.

இன்வெலுசனல் அலோபீசியா -வயதாகுவதால் கூந்தல் இழப்பு நேரிடும். அலோபீசியா அரேட்டா -உடம்பில் எந்தவொரு பகுதியிலும் திட்டு திட்டாக முடி கொட்டுதல் ட்ராக்ஷன் அலோபீசியா பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அல்லது இறுக்கமான போனி ஸ்டைல் காரணமாக முடி உதிர்தல் ஏற்படும் டெலோஜென் எஃப்ளூவியம் மன அழுத்தம், உணர்ச்சி ரீதியான பிரச்சினைகளால் கூந்தல் உதிர்தல் ஏற்படுகிறது.

அனஜென் எஃப்ளூவியம்: கீமோதெரபி காரணமாக உடல் முழுவதும் முடி உதிர்தல் ஏற்படுகிறது. அலோபீசியா பார்பா: ஆண்களின் முக அல்லது தாடிகளில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. ட்ரைக்கோட்டிலோமேனியா குழந்தைகள் தேவையில்லாமல் முடியை பிடுங்குவதால் ஏற்படும் முடி இழப்பு.

முடி உதிர்தலின் அறிகுறிகள் - முடி உதிர்தல் பிரச்சனை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்படலாம். - கூந்தலின் அடர்த்தி குறைந்து ஒல்லியாகும் - வட்ட வடிவில் வழுக்கை தாடி மற்றும் புருவங்களில் ஏற்படும் -தலையில் அரிப்பு மற்றும் குளிக்கும் போதோ அல்லது சீப்பைக் கொண்டு சீவும் போதோ கொத்தாக முடி உதிரிக் கூடும். - முடியில் பிளவுகள் மற்றும் தலையில் வீக்கம் ஏற்படும். கண்டறிதல் ஒரு நபரின் மருத்துவ பரிசோதனைகள், குடும்ப விவரங்கள் போன்றவை சேகரிக்கப்படும். ஏனெனில் முடி உதிர்தல் மரபணு ரீதியாக கூட ஏற்படலாம். இரத்த பரிசோதனை பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு முடி உதிர்தலுக்கான காரணங்கள் கண்டறியப்படும். ஸ்கால்ப் பயோப்ஸி இந்த முறையில் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து சில முடிகளை எடுத்து அதன் வேர்க் கால்களில் ஏதேனும் தொற்று உள்ளதா என்பதை கண்டறிவார்கள். புல் டெஸ்ட் பாதிக்கப்பட்ட நபரின் முடிகளை இழுத்து எவ்வளவு முடிகள் வேருடன் வருகிறது என்பதை ஆராய்வார்கள். அதே மாதிரி முடியின் நிறத்தையும் கணக்கிடுவார்கள்.

லைட் மைக்லோஸ்கோபி (ஒளி நுண்ணோக்கி) கண்ணுக்கு தெரியாமல் கூந்தலில் இருக்கும் தொற்றுக் கிருமிகள் மற்றும் பாதிப்புகளை கண்டறிய பயன்படுகிறது. சிகிச்சைகள் பாலினம் மற்றும் முடி உதிர்தல் வகைகளைப் பொறுத்து சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஸ்டீராய்டு ஊசிகள் கார்டிகோஸ்டீராய்டு எனப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் தோலின் வழியாக செலுத்தப்பட்டு அட்ரீனல் சுரப்பி ஹார்மோனை மேம்படுத்தி முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது.

நோயெதிப்பு சிகிச்சை டைனிட்ரோகுளோரோபென்சீன் மற்றும் டிபென்சிபிரோன் போன்ற இரசாயனங்களை தலையில் தேய்க்கும் போது மறுபடியும் முடி வளர ஆரம்பிக்கிறது.

லேசர் தெரபி லேசர் கருவி மூலம் போட்டான்களை தலையில் அனுப்பி கதிரியக்கம் செய்யப்படுகிறது. இதனால் இந்த போட்டான்கள் தலையால் உறிஞ்சப்பட்டு உடனே முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது.

முடி மாற்று அறுவை சிகிச்சை தலையில் ஏற்பட்டுள்ள வழுக்கை திட்டுகளை நீக்கி அந்த பகுதியில் ஆரோக்கியமான முடிகளை நட்டு விடுகிறார்கள் பியூட்டி எக்ஸ்பட்டுகள்.

சூரியக் கதிர் சிகிச்சை இந்த முறையில் வழுக்கை உள்ள பகுதிகளில் அல்ட்ரா வைலட் கதிர்களை அனுப்பி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து முடி வளர்ச்சியை தூண்டுகின்றன.

தடுக்கும் வழிகள் - இறுக்கமான சடை, போனி ஸ்டைல் மற்றும் கொண்டை போட வேண்டாம் - முடிகளை எக்காரணம் கொண்டும் பிடுங்காதீர்கள் - இரும்புச் சத்து மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் - ஹேர் ஸ்டைட்ரனர், ஹேர் ட்ரையர் போன்ற கருவிகளை பயன்படுத்தாதீர்கள். - கெமிக்கல் கலரிங் பொருட்களை பயன்படுத்தி முடிகளை கலரிங் செய்யாதீர்கள். மேற்கண்ட வழிகளைப் பின்பற்றி வந்தால் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்துவதோடு ஆரோக்கியமான கூந்தல் அழகை பெறலாம். 

Related Post